Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் ரியல் மாஸ்.. ராஞ்சி வீட்டில் நிறுத்தப்பட்டுள்ள பைக்ஸ்.. மிரண்டு போன வெங்கடேஷ் பிரசாத்.. வீடியோ!

ராஞ்சி: ராஞ்சியில் உள்ள எம்எஸ் தோனியின் வீட்டிற்கு சென்றுள்ள வெங்கடேஷ் பிரசாத், அவரது பைக்குகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் 50க்கும் அதிகமான பைக்குகள் இருப்பதை கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் ஆடிய தோனி, இந்தியாவுக்காக டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என்று அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்தவர். அதுமட்டுமல்லாமல் 5 ஐபிஎல் கோப்பை, சாம்பியன்ஸ் என்று சென்னை அணிக்காகவும் கேப்டனாக சாதித்து காட்டியுள்ளார். சென்னை அணிக்காக 14 சீசன்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தோனி, தமிழ்நாட்டின் தத்துப் பிள்ளையாக மாறிவிட்டார்.

Former cricketer Venkatesh Prasad shares the Bike collection video of MS Dhoni in Ranchi

எப்போதெல்லாம் தோனி சென்னை வருகிறாரோ, அப்போதெல்லாம் ரசிகர்களுக்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். ரசிகர்களிடையே தோனியின் மாஸ் குறையாததால், அவரின் விளம்பர வருவாயும் உச்சத்திலேயே இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை தோனி சேர்த்து வைத்துள்ளதாக பல்வேறு நிறுவனங்கள் கணக்கிட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் விவசாயம், முதலீடுகள், விளையாட்டு அணிகள், சினிமா என்றும் தோனி பல்வேறு துறைகளில் கால்பதித்து வருகிறார்.

அதேபோல் கிரிக்கெட் விளையாடுவதில் தோனி எவ்வளவு ஆர்வம் காட்டுவாரோ, அதே அளவிற்கு இருசக்கர வாகனங்கள் மீது பிரியம் கொண்டவர். இதனை தோனி பல்வேறு முறை வெளிப்படுத்தியுள்ளார். உலகின் முன்னணி இரு சக்கர வாகனங்களை வாங்கி தனது வீட்டில் தோனி வைத்துள்ளார். அந்த பைக்குகளின் புகைப்படங்கள் திடீரென சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், தோனியுடன் அவரது பைக் ஷெட்டில் எடுத்துள்ள வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சுமார் 50க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 10க்கும் அதிகமான கார்களும் நிற்கின்றன. இதனை பார்த்து வெங்கடேஷ் பிரசாத் மட்டுமல்லாமல் அவரது நண்பர்களும் வியந்துபோவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. ராஞ்சியில் உள்ள வீட்டில் இவ்வளவு பைக்குகளையும் தோனி பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

இந்த பைக்குகள் பற்றி தோனி அந்த வீடியோவில், குடும்பத்தினர் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான ஷெட்டை வீட்டின் அருகே அமைக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் வேறு வழியின்றி வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளியே ஷெட்டை அமைத்தோம். இந்த ஷெட் அருகில் பேட்மிண்டன் கோர்ட் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வெங்கடேஷ் பிரசாத்தை மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே மிரட்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Tuesday, July 18, 2023, 8:17 [IST]
Other articles published on Jul 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+