Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிளே பாயாக வாழ்ந்த யுவராஜ் சிங்.. டாப் 5 காதலிகள்.. பார்ட்டி பார்ட்டியாக சுற்றியது தெரியுமா?

மும்பை: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கிம் ஷர்மா, தீபிகா படுகோனே உள்ளிட்ட ஏராளமான நடிகைகளுடன் காதல் உறவில் இருந்துள்ளார். திருமணத்திற்கு பின் அமைதியான யுவராஜ் சிங் எத்தனை முறை காதலில் விழுந்தார் என்பதை பார்க்கலாம்.

2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கியமான காரணமாக அமைந்தவர் யுவராஜ் சிங். கிரிக்கெட் களத்தில் எவ்வளவு துடிப்புடன் இருந்தாரோ, அதேபோல் களத்தில் வெளியேவும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியவர் யுவராஜ் சிங். பார்ட்டிகளில் பங்கேற்பதோடு, பாலிவுட் நாயகிகள் ஏராளமானோருடன் காதலில் இருந்திருக்கிறார்.

Former Cricketer Yuvraj singh and his alleged love affairs before marriage with Hazel Keech

அதில் 2005ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளாக நடிகை கிம் ஷர்மாவுடன் யுவராஜ் சிங் காதல் உறவில் இருந்திருக்கிறார். அந்த இரு ஆண்டுகளில் ஏராளமான பார்ட்டிகளில் கிம் ஷர்மாவுடனே யுவராஜ் சிங் பங்கேற்று வந்திருக்கிறார். இவர்களின் ஏராளமான புகைப்படங்கள் அப்போதே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இவர்களின் காதல் 2007ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.

Former Cricketer Yuvraj singh and his alleged love affairs before marriage with Hazel Keech

2007ஆம் ஆண்டுக்கு பின் நடிகை தீபிகா படுகோனேவுடன் யுவராஜ் சிங் காதலில் இருந்தார். 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் போது யுவராஜ் சிங்கை உற்சாகப்படுத்த தீபிகா படுகோனே தென்னாப்பிரிக்கா வரை சென்றார். அதேபோல் யுவராஜ் சிங் பிறந்தநாள் பார்ட்டியை ஒருங்கிணைக்கும் வரை இவர்களின் காதல் சென்றது. ஆனால் திடீரென இவர்கள் இருவரும் பிரிந்தனர்.

Former Cricketer Yuvraj singh and his alleged love affairs before marriage with Hazel Keech

தமிழில் தாஜ்மஹால் படத்தில் நடித்த நாயகியான ரியா சென் உடனும் யுவராஜ் சிங் சில காலம் டேட்டிங் செய்துள்ளார். தீபிகா படுகோனேவுடன் பிரிந்த பின், ரியா சென்னுடன் யுவராஜ் சிங் டேட்டிங் செய்துள்ளார். பார்ட்டி ஒன்றில் சந்தித்த இருவரும், பின்னர் தனியாக ஏராளமான பார்ட்டிகளுக்கு தனியாக சென்றுள்ளனர். பின்னர் இருவரும் கைகோர்த்த புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Former Cricketer Yuvraj singh and his alleged love affairs before marriage with Hazel Keech

இதுமட்டுமல்லாமல் தோனியின் முன்னாள் காதலியான லட்சுமி ராயையும் யுவராஜ் சிங் சில மாதங்கள் டேட் செய்துள்ளார். பின்னர் புற்றுநோய் பாதிப்பிற்கான சிகிச்சை எடுத்து கொண்ட யுவராஜ் சிங், இறுதியாக பில்லா பட நடிகை ஹெசல் கிச்சை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஓரியன் என்ற மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பின் யுவராஜ் சிங் எந்த நடிகையுடனும் சர்ச்சைகளில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 26, 2023, 17:15 [IST]
Other articles published on Jul 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+