
சிஎஸ்கேவின் நெருக்கடி
ஆனால் இந்த முறை அந்த அணிக்கு மிக நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தான். மெகா ஏலத்தில் சஹாரை வாங்க ரூ. 14 கோடி செலவழித்து சிஎஸ்கே அதிர்ச்சி தந்தது. ஆனால் அவர் தற்போது காலில் ஏற்பட்ட தசை நார் கிழிவு பிரச்சினையால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பாரா என்பதிலேயே சந்தேகம் நிலவி வருகிறது.

சிஎஸ்கே திட்டம்
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர்கள் வசீம் ஜாஃபர், ஆகாஷ் சோப்ரா, டேனியல் விட்டோரி ஆகியோர் பேசியுள்ளனர். விட்டோரி பேசுகையில், சஹார் இல்லாதது சிஎஸ்கே பெரிய நஷ்டமாகும். அவருக்கு மாற்றாக கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே இருப்பார்கள். ஆனால் அவர்களை கொண்டு வந்தால் டேவோன் கான்வேவை வெளியே உட்கார வைக்க வேண்டியிருக்கும். இந்திய வீரருக்கு மாற்றாக மற்றொரு உள்நாட்டு வீரர் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்று வீரரே இல்லை
இதனை மறுத்து பேசிய ஆகாஷ் சோப்ரா, தீபக் சஹாருக்கு மாற்று வீரர் இருந்திருந்தால், அவர் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டிருக்க மாட்டார். பவர் ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை எடுத்தால் தான் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கும். ஆனால் சஹார் இல்லையென்றால் பவர் ப்ளே ஓவர்களில் அது நடக்காது. இதுதான் கடந்த சீசனில் சிஎஸ்கேவின் வெற்றி ஃபார்முலாவாக இருந்தது. எனவே சிஎஸ்கே இதுகுறித்து சிந்திக்கும் என நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை தோனி ஹங்கர்கேகர் குறித்து சிந்தித்து பார்ப்பார் என எதிர்பார்க்கிறேன் என அவர் தெரிவித்தார்.

தோனியின் விக்கெட்
இது ஒருபுறம் இருக்க, இந்திய இளம் வீரர்களுக்கு தோனி, ஸ்பெஷல் வகுப்பு எடுத்து வருவார் எனத் தெரிகிறது. அவர்களுடன் அருகில் இருந்து தனது சிக்னலுக்கு ஏற்ப இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த இண்ட்ரா ஸ்குவாட் போட்டியில் தோனியின் விக்கெட்டை எடுத்து இளம் வீரர்கள் அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications