Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாஜி சிஎஸ்கே பிளேயர்னா சும்மாவா..6 சிக்ஸ், 8 பவுண்டரி.. டி10 லீக்கில் பொளந்து காட்டிய உத்தப்பா!

ஹராரே: ஜிம்பாப்வே ஆப்ரோ டி10 லீக் தொடரில் சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா 36 பந்துகளில் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உட்பட 88 ரன்கள் விளாசியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்பே ஆப்ரோ டி10 லீக் தொடரில் இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் சாதித்து வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இரு நாட்களுக்கு முன் ஸ்ரீசாந்த் வீசிய டெத் ஓவர், நேற்றைய ஆட்டத்தில் யூசுப் பதான் 26 பந்துகளில் 80 ரன்கள் விளாசி அசத்தினர். அவர்களை தொடர்ந்து சிஎஸ்கே முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா மிரட்டலான சம்பவத்தை செய்துள்ளார்.

Former CSK Cricketer Robin Uthappa scores 88 Runs in 36 Balls in the Zim Afro T10 League

ஜிம்பாப்வே ஆப்ரோ டி10 லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் கேப் டவுன் சாம்ப் ஆர்மி அணியை எதிர்த்து ஹராரே ஹரிகேன்ஸ் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கேப் டவுன் சாம்ப் ஆர்மி அணிக்கு குர்பாஸ் - ராஜபக்சே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ராஜபக்சே 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜனத் 10 பந்துகளில் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடிய குர்பாஸ் ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரும் பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். 26 பந்துகளில் 6 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் ஷேன் வில்லியம்ஸ் 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் குவித்தது.

இதையடுத்து கடினமான இலக்கை விரட்டிய ஹராரே ஹரிகேன்ஸ் அணி தரப்பில் ராபின் உத்தப்பா - லூவிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதில் லூவிஸ் 12 ரன்களில் ஆட்டமிழக்க, டோனவன் ஃபெரேரா - உத்தப்பா இருவரும் பொளந்து கட்டினர். குறிப்பாக ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சர்களை விளாசி தள்ளிய ராபின் உத்தப்பா, 19 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

இதையடுத்து ஒவ்வொரு பந்தையும் சிக்சருக்கு அனுப்பிய உத்தப்பாவின் ருத்ர தாண்டவத்தால், ஹராரே ஹரிகேன்ஸ் அணி 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. சிறப்பாக ஆடிய உத்தப்பா 36 பந்துகளில் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உட்பட 88 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஜிம்பாப்வே ஆப்ரோ டி10 லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஹராரே ஹரிகேன்ஸ் அணி முன்னேறியுள்ளது. ராபின் உத்தப்பாவின் அதிரடி ஆட்ட வீடியோ சென்னை ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, July 29, 2023, 18:09 [IST]
Other articles published on Jul 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+