For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னா மனுஷன்யா !! சிஎஸ்கேவை விட்டுத்தராத சுரேஷ் ரெய்னா.. பத்திரிகையாளர் சந்திப்பில் நெகிழ்ச்சி!!

மும்பை: ஐபிஎல் தொடரில் இந்தாண்டு அதிக கவனம் ஈர்க்கப்போகும் 5 வீரர்கள் யார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் சனிக்கிழமை ( மார்ச் 26 )முதல் தொடங்கவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டும் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டு பல சுவாரஸ்யங்கள் இருந்த போதும், சுரேஷ் ரெய்னா இல்லாதது தான் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே தந்த ஏமாற்றம்

சிஎஸ்கே தந்த ஏமாற்றம்

சென்னை அணிக்காக பல வெற்றிகளை குவித்துள்ள ரெய்னாவை மெகா ஏலத்தில் கைவிட்டனர். இதன் பின்னர் குஜராத் அணி ஜேசன் ராய்-க்கு பதிலாக ரெய்னாவை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டதும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு கடைசியில் தான் ஒரு மகிழ்ச்சி செய்தி வந்தது.

புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

அதாவது சுரேஷ் ரெய்னா இந்தாண்டு ஐபிஎல்-ல் வர்ணனையாளராக களமிறங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரியும் மீண்டும் கமெண்ட்டேடரி செய்யவுள்ளார். இதனையடுத்து இன்று இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

ரெய்னா விளக்கம்

ரெய்னா விளக்கம்

அப்போது பேசிய ரெய்னா, ஐபிஎல் ஒரு இந்தியாவின் திருவிழாவை போன்று மாறிவிட்டது. இந்தாண்டு இளம் வீரர்களான இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் அதிகம் கவனிக்கப்பட கூடிய வீரர்களாக திகழ்வார்கள், அதில் சந்தேகம் இல்லை என ரெய்னா கூறினார்.

Recommended Video

IPL-ல் Suresh Raina-வின் அடுத்த அவதாரம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
நெகிழ்ந்த சிஎஸ்கே

நெகிழ்ந்த சிஎஸ்கே

இதன் பின்னர் சிஎஸ்கேவை விட்டுக்கொடுக்காத ரெய்னா, சென்னை அணி இந்தாண்டு பல சிறந்த ஆல்ரவுண்டர்களுடன் பலமான ஃபார்மில் இருக்கிறது. ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி போன்றோர் அதிக கவனம் பெறுவார்கள் என கூறினார். சிஎஸ்கே புறக்கணித்த போதும், விட்டுக்கொடுக்காமல் ரெய்னா பேசியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Story first published: Tuesday, March 22, 2022, 18:06 [IST]
Other articles published on Mar 22, 2022
English summary
Suresh Raina selects 5 player to watch out in IPl 2022, CSK fans getting emotional
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+