முட்டாள்.. அறிவிருக்கா? இந்திய ரசிகரை கண்டபடி பேசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்…..! காரணம் இதுதான்
Recommended Video
லண்டன்: இங்கிலாந்து வெற்றியை விமர்சித்த இந்திய ரசிகரை முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
உலக கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. அதனால் இங்கிலாந்துக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பிறகு ஆட துவங்கிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் 241 ரன்கள் எடுக்க, ஆட்டம் டை ஆனது. அதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் நிர்ணயிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் டை ஆனதால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.
வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ட்வீட் ஒன்றினை பதிவு செய்தார். அந்த டிவீட்டில் இங்கிலாந்து அணியை வாழ்த்தி இருந்தார்.
அந்த ட்வீட்டை இந்திய ரசிகர் ஒருவர் விமர்சித்திருந்தார் அதில் ரசிகர் கூறி இருப்பதாவது: போட்டியை இங்கிலாந்து அணி வீரர்கள் வெல்லவில்லை. அம்பயர் மற்றும் ஐசிசி விதியே இங்கிலாந்துக்கு வெற்றியை பெற்றுத் தந்தது என்று பதிவிட்டிருந்தார்.
இதனை கண்ட வாகன், முட்டாள்... நீங்க உங்க வாயை மூடுங்க என்று இந்திய ரசிகர்கருக்கு கடுமையாக பதிலளித்துள்ளார். வாகனின் இந்த டிவீட்டை கண்ட இந்திய ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications