Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'அந்த பயம் இருக்கனும்' சும்மா இருந்த கோலியை சீண்டிய காம்டன்.. ரசிகர்களின் பதிலடியால் தெறித்து ஓட்டம்

லண்டன்: கேப்டன் விராட் கோலி குறித்து அவதூறாக பேசிய இங்கிலாந்து முன்னாள் வீரர் காம்டன் ரசிகர்கள் கொடுத்த பதிலடியால் திணறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சண்டை மற்றும் பிரச்னைகளுடன் பரபரப்பாக நடந்து முடிந்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடங்கி வைத்த பிரச்னை போட்டி முடிந்து 2 நாட்கள் ஆன பிறகும் கூட தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கோலியை மீண்டும் சீண்டி வருகின்றனர் இங்கிலாந்து கிரிக்கெட்டை சேர்ந்தவர்கள்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த சூழலில் தேவையில்லாத பிரச்னைகளை செய்து கோட்டை விட்டனர். முதல் இன்னிங்ஸில் பும்ரா - ஆண்டர்சன் இடையே ஏற்பட்ட மோதல், பின்னர் 2வது இன்னிங்ஸில் அணிகளின் மோதலாக மாறியது. ஒவ்வொரு வீரர்களும் வேண்டுமென்றே சண்டையிட்டுக்கொண்டனர்.

கோலியின் ஸ்லட்ஜிங்

கோலியின் ஸ்லட்ஜிங்

குறிப்பாக இங்கிலாந்து வீரர்களின் செயல்பாடுகளால் கடுப்பான விராட் கோலி, அந்த அணி பேட்டிங் செய்த போது ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் கடும் பதிலடி கொடுத்தார். பட்லர், ராபின்சன் ஆகியோர் விராட் கோலியிடம் நன்கு வாங்கிக்கட்டிக் கொண்டனர். மேலும், அவுட்டாகிவிட கூடாது என்று ஆடும் இவர்(ராபின்சன்), நான் கவர் டிரைவை மிஸ் செய்த போது என்னை பார்த்து சிரிக்கிறார். இப்போது என்னை ஃபேஸ் செய்ய முடியாமல் நிற்கிறார் என்று கிண்டலடித்தார்.

மோசமான பதிவு

மோசமான பதிவு

போட்டி முடிந்து 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கேப்டன் விராட் கோலியை மிக மோசமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்டன் விமர்சனம் செய்திருந்தார். கோலி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், விராட் கோலிக்கு தான் இருப்பதிலேயே ( Most Foul Mouthed Individual) மிகவும் இழிவாக, மோசமாக பேசக்கூடிய வாய் உள்ளது. 2012ம் ஆண்டு அவர் என்னை அசிங்கப்படுத்தியதை மறக்கவே முடியாது. கோலியின் இந்த செயலே ஒருவரின் குணத்தை முடிவு செய்துவிடும். சச்சின் டெண்டுல்கர், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற தலைசிறந்த வீரர்கள் மிகவும் அமைதியாக இருப்பார்கள். ஆனால் கோலி மிகவும் திமிர் புடித்தவர் என்பது போல நிக் காம்டன் பதிவிட்டுள்ளார்.

வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

காம்டனின் பதிவை கண்ட இந்திய ரசிகர்கள், அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர். இங்கிலாந்து வீரர்கள் பும்ராவை ஸ்லட்ஜிங் செய்த போது எங்கிருந்தீர்கள், அதற்கு உங்கள் ஊரில் என்ன பெயர். அவர்கள் செய்தது தவறில்லை என்றால், கோலி செய்ததும் தவறில்லை. இங்கிலாந்து வீரர்கள் தான் எப்போதுமே வம்பிழுத்து வருகின்றனர். எங்களை குறை சொல்லாதீர்கள் என கடுமையாக விமர்சித்தனர்.

காம்டனுக்கு வந்த தலைவலி

காம்டனுக்கு வந்த தலைவலி

இந்நிலையில் இந்திய ரசிகர்களின் விமர்சனங்களை தாங்க முடியாத நிக் காம்டன், விராட் கோலி குறித்த தனது ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளார். கோலியை தேவையின்றி அவதூறு செய்யும் வகையில் பேசினால், சும்மா விடமாட்டோம் என்பது போல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் நிக் காம்டன், விராட் கோலி குறித்த பதிவுக்கு பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என போர்க்கொடித் தூக்கியுள்ளனர்.

Story first published: Thursday, August 19, 2021, 16:24 [IST]
Other articles published on Aug 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+