Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நீங்கள் செய்தது சரியா?” கோலி குறித்து மிக மோசமாக பேசிய காம்டன்.. வச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்!

லண்டன்: இந்திய அணி கேப்டன் விராட் கோலி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் காம்டன் மிக இழிவாக பேசியுள்ள சம்பவம் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சீண்டல் மற்றும் சண்டைகளுக்கு சற்றும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது.

குறிப்பாக ஜோஸ் பட்லர், ஒல்லி ராபின்சன், விராட் கோலி, ஆண்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் மிகக்கடுமையாக ஸ்லட்ஜிங் செய்து மைதானத்தில் பரபரப்பை கிளப்பினர்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி பெரும்பாலும், இங்கிலாந்து அணியின் வசம் செல்லும், அல்லது டிரா ஆகும் என்ற நிலை தான் இருந்தது. ஆனால் தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டதை போல இங்கிலாந்து வீரர்கள், தேவையின்றி இந்திய வீரர்களை வம்பிழுத்து வாங்கிக்கட்டி கொண்டுள்ளனர்.

என்ன பிரச்னை

என்ன பிரச்னை

முதல் இன்னிங்ஸின் போது ஆண்டர்சனுக்கு எதிராக, பும்ரா பவுன்சர் பந்துகளாக போட்டு தாக்கினார். அவை ஆண்டர்சனின் உடல்களில் பல இடங்களில் பதம் பார்த்தது. இதனால் ஆத்திரமடைந்த ஆண்டர்சன், இந்திய அணியின் 2வது இன்னிங்ஸின் போது, பும்ராவை ஒட்டு மொத்த இங்கிலாந்து அணியையும் திரட்டி வம்பிழுத்தார். பும்ராவை வேண்டுமென்றே ஒவ்வொரு ஓவருக்கும் இடையேயும் பட்லர் சீண்டினார். இதனையெல்லாம் பார்த்த விராட் கோலி மீண்டும் தனது பழைய ஆக்ரோஷத்திற்கு சென்றார்.

கோலியின் ஸ்லட்ஜிங்

கோலியின் ஸ்லட்ஜிங்

இங்கிலாந்து வீரர்கள் கொடுத்ததை சொல்லி வைத்து ஒவ்வொருக்கும் கோலி கொடுத்தார். பட்லர், ராபின்சன் ஆகிய வீரர்களுக்கு பந்துவீச்சு மூலம் பழிவாங்கியது மட்டுமின்றி அவ்வபோது சீண்டலில் ஈடுபட்டார். முகமது சிராஜும் ராபின்சனுக்கு பவுன்ஸர் வீசிவிட்டு பயங்கரமாக முறைத்தார். பட்லரிடம், இது வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டி அல்ல என்று சீண்டிய கோலி, ஒல்லி ராபின்சனை போரிங்காக ஆடுவதாக சீண்டினார். மேலும், அவுட்டாகிவிட கூடாது என்று ஆடும் இவர்(ராபின்சன்), நான் கவர் டிரைவை மிஸ் செய்த போது என்னை பார்த்து சிரிக்கிறார். இப்போது என்னை ஃபேஸ் செய்யமுடியாமல் நிற்கிறார் என்று கிண்டலடித்தார்.

 மோசமான பதிவு

மோசமான பதிவு

இப்படி சண்டைகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி முடிவுற்ற நிலையில், 2 நாட்கள் கழித்து தற்போது இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்டன் விமர்சனம் செய்துள்ளார். கோலி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், விராட் கோலிக்கு தான் இருப்பதிலேயே ( Most Foul Mouthed Individual) மிகவும் இழிவாக, மோசமாக பேசக்கூடிய வாய் உள்ளது. 2012ம் ஆண்டு அவர் என்னை அசிங்கப்படுத்தியதை மறக்கவே முடியாது. கோலியின் இந்த செயலே ஒருவரின் குணத்தை முடிவு செய்துவிடும். சச்சின் டெண்டுல்கர், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற தலைசிறந்த வீரர்கள் மிகவும் அமைதியாக இருப்பார்கள். ஆனால் கோலி மிகவும் திமிர் புடித்தவர் என்பது போல நிக் காம்டன் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Virat Kohli -ன் வெறித்தனமான Motivation | IND vs ENG Lord's Test | OneIndia Tamil
வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

காம்டனின் பதிவை கண்ட இந்திய ரசிகர்கள், அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர். இங்கிலாந்து வீரர்கள் பும்ராவை ஸ்லட்ஜிங் செய்த போது எங்கிருந்தீர்கள், அதற்கு உங்கள் ஊரில் என்ன பெயர். அவர்கள் செய்தது தவறில்லை என்றால், கோலி செய்ததும் தவறில்லை. தென்னாப்பிரிக்க அணியின் ஃபிலாண்டரின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது பட்லர் வேண்டுமென்றே அவரை கிண்டல் செய்தார். அதன் புகைப்படத்தையும் பதிவிட்டு, இதுதான் உங்கள் புத்தி என விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Thursday, August 19, 2021, 10:30 [IST]
Other articles published on Aug 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+