Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய கிளர்ச்சியே ஏற்படும்... பூதாகரமாக வெடித்த பிட்ச் சர்ச்சை... ஐசிசியை விளாசும் முன்னாள் வீரர்

அகமதாபாத்: இத்தனை சர்ச்சைகளையும் தாண்டி அகமதாபாத் பிட்ச்-க்கு ஐசிசி அங்கீகாரம் வழங்கினால் என்ன ஆகும் என முன்னாள் வீரர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் பிட்ச் மோசமானது என அறிவிக்கக்கோரி முன்னாள் வீரர்களிடம் இருந்து ஐசிசியிடம் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் சர்ச்சைகளை தாண்டி அகமதாபாத் பிட்ச்-க்கு ஐசிசி அங்கீகாரம் வழங்கினால் டெஸ்ட் கிரிக்கெட் புதிய கிளர்ச்சி ஏற்படும் என டேவிட் லாய்ட் தெரிவித்துள்ளார்.

மோசமான பிட்ச்

மோசமான பிட்ச்

அகமதாபாத் ஸ்டேடியம் தொக்கம் முதலே ஸ்பின்னர்களுக்கான பிட்சாக இருந்ததால் இங்கிலாந்து அணி திணறியது. குறிப்பாக இங்கிலாந்து தரப்பில் பார்ட் டைம் ஸ்பின்னராக இருக்கும் ரூட் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் அக்‌ஷர் சுழலில் சிக்கி இங்கிலாந்து 2 இன்னிங்ஸ்களிலும், 112 & 81 ரன்களுக்கு சுருண்டது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

மோதிரா மைதான பிட்ச் மோசமானது என முன்னாள் வீரர்கள் டேவின் லாய்ட், அலெஸ்டர் குக், ஆண்ட்ரூவ் ஸ்ட்ரெஸ் உள்ளிட்டோர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதற்கு எதிராக சுனில் கவாஸ்கர், ஜிவ்ராய் பாய்காட், கெவின் பீட்டர்சன், க்ரீம் ஸ்வான், கோலி, நாதன் லைன் ஆகியோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காட்டம்

காட்டம்

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவின் லாய்ட் ஒரு படி மேலே சென்று தாக்கியுள்ளார். அகமதாபாத் பிட்ச் சரியானது தான் என்றும் ஆடக்கூடிய ஒன்றுதான் என்றும் ஐசிசி தெரிவித்துவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய கிளர்ச்சி ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதே பிட்ச்

மீண்டும் அதே பிட்ச்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியும் மோதிரா மைதானத்திலேயே டான் நடைபெறவுள்ளது. வரும் மார்ச் 4ம் தேதி தொடங்கவுள்ள இப்போட்டியும் பகலிரவு டெஸ்டாக தான் நடைபெறவுள்ளது. இதனால் அந்த போட்டியிலாவது பிட்ச் பிரச்னைக்கு முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Sunday, February 28, 2021, 20:32 [IST]
Other articles published on Feb 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+