நான் என்ன கோமாளி மாதிரியா தெரியறேன்..? கிரிக்கெட் வாரியத்தை அதிர வைத்த முன்னாள் சிஎஸ்கே வீரர்
லண்டன்: இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பதவிக்கான தனது விண்ணப்பத்தை கிரிக்கெட் வாரியம் பொருட்படுத்தவே இல்லை என்று முன்னாள் வீரர் பிளின்டாப் புகார் வாசித்திருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் பிளின்டாப். இங்கிலாந்து அணிக்காக 141 ஒருநாள் போட்டிகள் மற்றும் 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டியில் 3,394 ரன்களும், டெஸ்ட் போட்டியில் 3845 ரன்களும் குவித்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் 169 விக்கெட்டுகளும், டெஸ்டில் 226 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, 2005ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல் பட்டார். அதன் விளைவாக இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

பயிற்சியாளர் பதவி
2010ம் ஆண்டு ஓய்வு பெற்றாலும், 2014ம் ஆண்டில் டி20 போட்டிகளில் களமிறங்கினார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளார். அது குறித்து பிளின்டாப் கூறியிருப்பதாவது:

இமெயில் அனுப்பினேன்
2014ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள இமெயில் அனுப்பினேன். இந்த மின்னஞசலுக்கு நீண்ட நாட்கள் ஆகியும் பதில் வரவில்லை.

நகைச்சுவை
அதன் பிறகு, இமெயில் குறித்து விசாரிக்க ஆரம்பித்தேன். அப்போது தொலை பேசி அழைப்பின் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனது இமெயிலை ஜோக் என்று நினைத்திருப்பது தெரிய வந்தது.

பிடித்த விஷயம்
பயிற்சியாளர் பதவி என்பது எனது கனவு. இங்கிலாந்து பயிற்சியாளர் பதவி மிகவும் பிடித்த விஷயம். எனவே, நானும் என்றாவது ஒருநாள் இங்கிலாந்து பயிற்சியாளராக இருப்பேன் என்றார்.


Click it and Unblock the Notifications