Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது ஆஷஸ்-ஐ விட முக்கியமானது...ரொட்டேஷன் பாலிசி தேவையா..இங்கிலாந்துக்கு முன்னாள் வீரர் சரமாரி கேள்வி

அகமதாபாத்: 3வதுட் டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியடைந்த நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மீது முன்னாள் வீரர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3வதுட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மோசமான தோல்வியை பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி தேர்வு சரியில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மீது அந்நாட்டின் முன்னாள் வீரர் இயான் பெல் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது, பேசுப்பொருளாகியுள்ளது.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

முதல் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் இங்கிலாந்து முறையே 112 & 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு ஸ்பின்னர் மட்டுமே இருந்தார். இது தோல்விக்கு முக்கிய காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் மொயீன் அலி சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டதும் பேசுப்பொருளானது.

 பெல் அதிருப்தி

பெல் அதிருப்தி

போட்டி குறித்து பேசியுள்ள அவர், இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்காக மிகவும் முன்கூட்டியே யோசித்து வருகிறது. அதனால் ரொடேஷன் பாலிசி மூலம் அணியை மாற்றுகிறது. ஆனால் இது ஆஷஸ் தொடரை விட மிக முக்கியமான ஒன்று. வெற்றி கூட்டணிகளை மாற்றக்கூடாது. ஃபார்மில் இருக்கும் வீரர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

இயான் கேள்வி

இயான் கேள்வி

கோடைக்காலத்தில் இந்திய அணி இங்கிலாந்து வரவுள்ளது. அப்போது அவர்கள் தொடைரில் 2 -0, 1 - 0 என்ற நிலையில் இருக்கும் போது அணியை மாற்றுவார்களா? கண்டிப்பாக இல்லை. நீங்கள் இந்தியா போன்ற இடங்களில் வெற்றி பெற்றால் நீண்ட நாட்களுக்கு புகழ் இருக்கும். எனவே ஆஷஸ் தொடர் பற்றி மிக முன்கூட்டியே யோசிக்கக்கூடாது. அது தவறான முடிவு என தெரிவித்துள்ளார்.

வெளியேறிய இங்கிலாந்து.

வெளியேறிய இங்கிலாந்து.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்குள் நுழைய இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் 3வது டெஸ்டில் தோல்வி அடைந்ததன் மூலம் தொடைரில் இருந்து இங்கிலாந்து வெளியேறியுள்ளது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Friday, February 26, 2021, 15:21 [IST]
Other articles published on Feb 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+