மாஜி இங்கிலாந்து டெஸ்ட் வீரர் ஆடம் ஹோலியாக் திவாலானவராக அறிவிப்பு

ஹோலியாக் மீது ஆஸ்திரேலிய தொழிலதிபர் மார்ட்டின் ரைமான் என்பவர் தெற்கு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள குவீன்ஸ்லாந்த் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஹோலியாக் திவாலானவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் கடந்த 9 மாதங்களாக நடந்து வந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஹோலியாக் மற்றும் அவரது தந்தை ஜான் ஆகியோர் மீது 20.7 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் பணம் தரக் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார் ரைமான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோலியாக் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். இங்கிலாந்தில் குடியேறி அந்த நாட்டுக்காக கிரிக்கெட் ஆடி வந்தார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அந்த நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு கடனில் மூழ்கியது.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெக் ஸ்டூவர்ட் உள்பட 40 பேருக்கு 2 கோடி ஆஸ்திரேலிய டாலர் பணத்தைக் கொடுக்க வேண்டிய நிலையில் அந்த நிறுவனம் இருந்து பின்னர் நிறுவனத்தை மூடி விட்டார் ஹோலியாக்.
இந்த நிலையில்தான் அவர் திவால் ஆனவராக ஆஸ்திரேலிய கோர்ட் அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள், 35 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார் ஹோலியாக். 1997ல் நடந்த ஷார்ஜா கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.
Story first published: Wednesday, May 30, 2012, 8:57 [IST]
Other articles published on May 30, 2012


Click it and Unblock the Notifications