Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயத்தில் இருந்து வந்தவரை இப்டி கதற விடுறீங்களே.. விளாசும் முன்னாள் ஆல் ரவுண்டர்

சென்னை: மீண்டும் மீண்டும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி முழுதாக இரண்டு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி சம்பாதித்த அத்தனை பெயரும் காற்றோடு கலந்துவிட்டது.

இங்கிலாந்து அணி வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 450 ரன்களைக் கடந்து ஆடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் முகத்தில் டயர்ட் இருக்கிறதா இல்லையா என்பதை லென்ஸ் வைத்து தான் பார்க்க வேண்டும் போல.. களத்திற்கு வருபவர்கள், நிற்பவர்கள் என அனைவரும் ஏதோ ஒரு இன்டென்ட்டோடு பேட்டிங் செய்கின்றனர்.

 என்ன டீம் இது?

என்ன டீம் இது?

இந்நிலையில், இப்போட்டியின் அணித்தேர்வு குறித்து முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் மதன் லால், தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், "இந்தியா சரியான பவுலிங் லைன்அப்-ஐ தேர்வு செய்யவில்லை. அவர்கள் மூன்று ஃபாஸ்ட், 2 ஸ்பின்னர்களுடன் விளையாடியிருக்க வேண்டும்.

 இஷாந்துக்கு எதற்கு வாய்ப்பு?

இஷாந்துக்கு எதற்கு வாய்ப்பு?

இஷாந்த் ஷர்மா இப்போது தான் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அவருக்கு எதற்கு முதல் போட்டியிலேயே வாய்ப்பு கொடுக்க வேண்டும்? ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்களுக்கு பிறகு அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஒருவேளை 3 ஃபாஸ்ட் வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், ஆஸி.,யில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ்க்கு வாய்ப்பு தரலாமே?

 தேர்வில் சொதப்பல்

தேர்வில் சொதப்பல்

அதேபோல் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் ஷர்துல் தாகூரை தேர்வு செய்திருக்கலாம். பேட்டிங் டெப்த்தை பலப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் ஷர்துல் தான் பெஸ்ட் சாய்ஸ். குறிப்பாக, நதீம்க்கு பதிலாக குல்தீப் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

 450 ரன்களை கடந்தால்...

450 ரன்களை கடந்தால்...

ஜோ ரூட்டின் சதம் தனித்துவமானது. இங்கிலாந்து 450 ரன்களை கடந்துவிட்டால், அதன்பிறகு இந்தியாவுக்கு தான் நெருக்கடி அதிகரிக்கும் என்று லால் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போதைய நிலவரம் கலவரமாக உள்ளது. ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து தொடர்ந்து களத்தில் நிற்கிறார். இங்கிலாந்தும் 450 ரன்களைக் கடந்துவிட்டது.

Story first published: Saturday, February 6, 2021, 16:17 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+