Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கார் ஓட்டிச் சென்ற வினோத் காம்ப்ளிக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

Former India cricketer Vinod Kambli suffers heart attack
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு(42) இன்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு இதய வால்வுகளில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்க ஆன்ஜியோபிளாஸ்டி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காம்ப்ளியும் சச்சினும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பாலிய நண்பர்கள். ஆனால் அண்மையில் பேட்டி கொடுத்த காம்ப்ளி சச்சினும் தானும் இனி நண்பர்கள் கிடையாது என்று தெரிவித்தார். சச்சின் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும்போது அளித்த உரையில் என் பெயரை குறிப்பிடவில்லை, மேலும் அவர் அளித்த விருந்துக்கும் என்னை அழைக்கவில்லை என்றார் காம்ப்ளி.

பள்ளியில் படிக்கையில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது சச்சினும்(326*), காம்ப்ளியும்(349*) சேர்ந்து 664 ரன்கள் எடுத்தனர். இந்த ரன்கள் தான் சச்சினின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 29, 2013, 19:13 [IST]
Other articles published on Nov 29, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+