Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final 2021: இஷாந்த் விடுங்க.. சிராஜ் எடுங்க.. செம "ட்விஸ்ட்" - சிந்திய வியர்வைக்கு பலன்

மும்பை: முகமது சிராஜ், இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துவிட்டார் என்று இந்திய முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதோ.. இன்னும் கொஞ்ச நாள் தான். ஜூன் 18ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தொடங்கவிருக்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

இதில் பேட்ஸ்மேன்களை விட, ரசிகர்கள் அதிகம் எதிர்நோக்கும் விஷயம் என்னவெனில், அணியில் இடம் பிடிக்கப் போகும் ஃபாஸ்ட் பவுலர்கள் யார் என்பதே.

ஃபாஸ்ட் பவுலர்கள் யார்?

ஃபாஸ்ட் பவுலர்கள் யார்?

இங்கிலாந்து கண்டிஷன் பற்றி சொல்லவா வேண்டும்? எகிறி வரும் பந்துகளும், அடிக்கடி மாறும் மேகங்களும், காற்றின் திசைகளும் பவுலர்களுக்கும் சரி, பேட்ஸ்மேன்களுக்கும் சரி மிகப்பெரிய தொந்தரவாக இருக்கும். சமயத்தில் அதுவே சாதகமாகவும் அமையும். அப்படியிருக்கையில், நியூசிலாந்தின் பேட்டிங்கை சமாளிக்கும் விதமாக இந்திய அணியில் இடம் பிடிக்கப் போகும் ஃபாஸ்ட் பவுலர்கள் யார் என்பதே கேள்வி.

சிராஜ் ஆக்ரோஷம்

சிராஜ் ஆக்ரோஷம்

பும்ரா, ஷமி, இஷாந்த், உமேஷ், சிராஜ் ஆகிய ஐந்து ஃபாஸ்ட் பவுலர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். இதில், சிராஜ் தவிர மற்ற அனைவர்க்கும் அணியில் இடம் கிடைக்க வாய்ப்புண்டு என்று சிலர் கருதலாம். ஏனெனில், இவர்கள் நால்வருமே அணியின் சீனியர் பவுலர்ஸ். எனினும், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில், லீடிங் விக்கெட் டேக்கராக இருந்தவர் சிராஜ் தான். விக்கெட்டுகள் மட்டுமல்ல, அவர் பவுல் செய்த விதம், காட்டிய ஆக்ரோஷம் அனைத்தும் ரசிகர்களை மட்டுமல்லாது தேர்வுக்குழுவினரையும் ஈர்த்தது.

மறக்க முடியாத போட்டி

மறக்க முடியாத போட்டி

இந்த நிலையில், இந்திய முன்னாள் வீரர்கள் ரீதிண்டர் சோதி மற்றும் சபா கரீம் ஆகியோர், முகமது சிராஜ் அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்கின்றனர். இதுகுறித்து அவர்கள், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் எனும் மிக முக்கிய கிரிக்கெட் போட்டியில், முகமது சிராஜ் விளையாடுவது தவிர்க்க முடியாதது. அந்த போட்டி அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக மாறப்போகிறது." என்றனர்.

களத்தில் சிங்கம்

களத்தில் சிங்கம்

மேலும், "சிராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னமும் குழந்தையாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவில் அவர் விளையாடிய விதம், அவர் காட்டிய போராட்ட குணம், அவர் வீசிய பந்துகள் போன்றவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிக்கு அவர் ஏன் முக்கியம் என்பதை உணர்த்துகிறது. பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் பவுலர்கள் லிஸ்டில், இஷாந்த் ஷர்மாவின் பெயருக்கு முன்னர் சிராஜ் பெயர் இருந்தால், அது மிகப்பெரிய விஷயமாக அமையும்.

சிராஜுக்கு வாய்ப்பு

சிராஜுக்கு வாய்ப்பு

இப்போது நியூசிலாந்தில் நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். டாம் லாதம், டெவோன் கான்வே, ஹென்றி நிகோலஸ், மிட்சல் சான்ட்னர் ஆகிய நான்கு வீரர்கள் உள்ளனர். இந்திய அணியின் பவுலர்களில், இந்த நான்கு இடது பேட்ஸ்மேன்களுக்கும் சிராஜ் சிறப்பாக பந்து வீச முடியும். அதனால், தான் விராட் மற்றும் ரவி சாஸ்திரியின் தேர்வாக சிராஜ் இருக்க வாய்ப்பிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளனர்.

Story first published: Saturday, June 5, 2021, 20:03 [IST]
Other articles published on Jun 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+