For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லுக்கு முன்னாடி ஏளனமா நடத்துனவங்க.. இப்ப மண்டி போட்டு நிக்கிறாங்க.. பரூக் என்ஜீனியர் விளாசல்!

மான்செஸ்டர்: "இங்கிலாந்து வீரர்கள் பணத்துக்காக இந்தியாவிடம் இப்போது மண்டியிடுவதை பார்க்கையில் ஆச்சர்யமாக உள்ளது" என்று இந்திய முன்னாள் வீரர் ஃபரூக் இன்ஜினியர் காட்டமாக பேசியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலே ராபின்சன், எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய தனது இனவெறி மற்றும் பாலியல் டிவீட்களால் தற்போது அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச போட்டிகளில் தற்காலிகமாக விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு மூத்த வீரர்கள் முதல் இங்கிலாந்து பிரதமர் வரை எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஓலே ராபின்சன் 18 வயதில் செய்த தவறுக்கு இப்போது மன்னிப்பும் கேட்டுவிட்டார். அதன் பிறகும் அவரை அணியில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நீக்கியிருப்பது அதிகபட்ச தண்டனை என்று கூறியுள்ளனர்.

 விளாசிய ஃபரூக் என்ஜினியர்

விளாசிய ஃபரூக் என்ஜினியர்

2012, 2013ம் ஆண்டுகளில் ஓலே ராபின்சன், பெண்கள் குறித்தும் அவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்தும் சற்று அவதூறாக ட்வீட் செய்திருந்தார். அதுமட்டுமின்றி, "என்னுடைய புதிய இஸ்லாமிய நண்பர் ஒரு வெடிகுண்டு. இதற்கு ஆசிய மக்கள் ஸ்மைலி கொடுத்தால் நான் ஆச்சர்யமடைவேன்"என்றும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ஓலே ராபின்சன் செயல்பாடுகள் குறித்தும், அவருக்கு துணையாக இங்கிலாந்து பிரதமர் நிற்பது குறித்தும் விட்டு விளாசியுள்ளார் முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபரூக் என்ஜினியர்.

 மொட்டிலேயே நறுக்கனும்

மொட்டிலேயே நறுக்கனும்

இதுகுறித்து அவர் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து அளித்த பேட்டியில், "ஓலே ராபின்சன் 18 வயது இளைஞனாக இருந்த போது ட்வீட் செய்துவிட்டார் என்று கூறுவதே அபத்தமானது. இது ஒரு தனிநபர் பொறுப்பேற்க வேண்டிய வயது. அவர்கள் (கிரிக்கெட் வீரர்கள்) அதிலிருந்து தப்பிக்க முடிந்தால், விளைவுகள் மோசமாக இருக்கும். ஆசிய மக்களுக்கு எதிராக அனைத்து வகையான கருத்துக்களையும் அவர்கள் கூறுவார்கள். அதை மொட்டிலேயே நறுக்க வேண்டும்.

 பெரிய அபராதம்

பெரிய அபராதம்

நான் அவர்களை ஆயுட்காலம் வரை தடை விதிக்கச் சொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக அவர்களுக்கு மிகப் பெரிய அபராதத்தை கொடுங்கள், அது அவர்களின் பாக்கெட் பணத்தில் பெரிய அடியை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அல்லது முதல் தர கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் சஸ்பெண்ட் செய்யுங்கள். அது குறித்து கண்டிப்பாக இருங்கள்.

 கேலி, கிண்டல்

கேலி, கிண்டல்

"நான் முதன்முதலில் கவுண்டி கிரிக்கெட்டுக்கு விளையாட இங்கிலாந்து வந்த போது, 'அவர் இந்தியாவைச் சேர்ந்தவரா?' போன்ற கேள்விக்குறிகள் இருந்தன, நான் லங்காஷயரில் சேர்ந்தபோது ஒன்று அல்லது இரண்டு முறை அதை (இனவெறி கருத்துக்களை) எதிர்கொண்டேன். நான் இந்தியாவில் இருந்து வந்ததால், என் உச்சரிப்பை கேலி செய்ய நினைத்தனர். பெரும்பாலான ஆங்கிலேயர்களை விட எனது ஆங்கிலம் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். அது மட்டுமல்லாமல், எனது பேட் மற்றும் கிளவுஸ் மூலமும் என்னை நிரூபித்தேன். இந்தியாவை பெருமை கொள்ளச் செய்தேன்.

 ஐபிஎல் மாற்றிவிட்டது

ஐபிஎல் மாற்றிவிட்டது

ஆனால் ஐ.பி.எல் இப்போது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. இப்போது வெளிநாட்டு வீரர்கள் இந்திய வீரர்களுடன் இலகுவாக உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கேலி, கிண்டல் செய்தவர்கள் இப்போது மண்டியிடுகிறார்கள். பணம் காரணமாக, அவர்கள் இப்போது நம்மிடம் மண்டியிடுவதை பார்க்கையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு ஆரம்பத்தில் அவர்களின் உண்மையான நிறங்கள் என்னவென்று தெரியும். இப்போது அவர்கள் திடீரென்று தங்கள் நிறங்களை மாற்றியுள்ளனர்" என்று பொறி பறக்க ஆவேசமாக பேசியுள்ளார்.

Story first published: Wednesday, June 9, 2021, 14:59 [IST]
Other articles published on Jun 9, 2021
English summary
Farokh Engineer Ollie Robinson suspension - பரூக் இன்ஜினியர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+