“இந்தியா நிச்சயம் தோற்றுவிடும்”.. முன்னாள் வீரர் கூறிய வெளிப்படை கருத்து.. காரணங்களும் சரிதான் போலயே
செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெறாது என இந்திய முன்னாள் வீரரே அடித்துக் கூறியுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது.
செஞ்சூரியனில் நடைபெறும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் படு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

செஞ்சூரியன் களம்
இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளை வீழ்த்திய போதும், தென்னாப்பிரிக்காவில் இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே கிடையாது. இரு அணிகளிலும் சம பலமான பவுலிங் உள்ள போதும், பேட்டிங்கில் யார் கெத்து காட்டுகிறார்கள் என்பதே முக்கியமாக பார்க்கப்படுகிறது.

தரமான ரெக்கார்ட்
செஞ்சூரியன் மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு மிகச்சிறந்த ரெக்கார்ட் உள்ளது. இதுவரை அங்கு அந்த அணி ஆடிய 26 டெஸ்ட்களில் 21 முறை வெற்றி கண்டுள்ளது. 4 போட்டிகள் சமனும், 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. மற்றொரு புறம் இந்திய அணி 2 ஆட்டங்களில் ஆடி இரண்டிலுமே தோல்வி கண்டுள்ளது. எனவே தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் என சிலர் கூறி வருகின்றனர்.

தோல்வி ?
இந்நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவது கடினம் தான் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த தொடர் சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கப் போகிறது. இந்திய அணிக்கு 49% மற்றும் தென்னாப்பிரிக்க அணிக்கு 49% வெற்றி வாய்ப்புகள் உள்ளன. இதனால் தொடர் சமனில் தான் முடியப்போகிறது என நினைக்கிறேன். அப்படி ஒருவேளை ஒரு அணி வெற்றி கண்டால் அது தென்னாப்பிரிக்காகவாக தான் இருக்கும். 4
Recommended Video

நல்ல குழு முயற்சி
இந்திய அணி இங்கு வெல்வது கடினம். ஆண்ரிக் நார்ட்ஜே விளையாடியிருந்தால், தென்னாப்பிரிக்கா 2 - 1 என வெற்றி பெற்றிருக்கும் என கூறுவேன். ஆனால் அவர் இல்லாததால் 1 - 1 என சமனில் முடிவடையலாம். முதல் டெஸ்ட் போட்டி மழையினாலேயே பாதிக்கப்பட்டுவிடும். தென்னாப்பிரிக்க அணி டி20 உலகக்கோப்பைக்கு பின்னர் குழுவாக சிறப்பாக செயல்படுகின்றனர். இந்திய அணி வீரர்கள் யாரும் சரியான ஃபார்மில் இல்லை என்பதே எனக்கு இருக்கும் முக்கிய கவலை. இதனால் தான் வெற்றி கிடைக்காது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications