Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி சொல்லிட்டாரே ? இந்தியாவுக்கு சுத்தமாக வாய்ப்பே கிடையாது.. காரணங்களை அடுக்கும் முன்னாள் வீரர்

மும்பை : டி20 உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான் என்று முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஆர் பி சிங் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றிலிருந்து வெளியேறியது. தங்களுடன் பலம் குன்றிய பாகிஸ்தான் இலங்கை அணிகளுடன் இந்தியா தோல்வியை தழுவியது.

இதில் இந்திய அணி தவறான யுக்திகளை பயன்படுத்தி கோட்டை விட்டதாக கிரிக்கெட் விமர்சனங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

குறிப்பாக இந்திய அணியின் ஃபினிஷர் ரோலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.ரிஷப் பண்ட் சரிவர விளையாடாமல் போனதும் இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது.தமிழக வீரர் அஸ்வினுக்கும் பெரும்பாலான போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதேபோன்று முகமது ஷமி ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்யாததும் விமர்சனத்தை பெற்றது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர் பி சிங் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் செயல்பாடுகளை பார்த்த பிறகு டி20 உலக கோப்பையை வெல்ல நமக்கு வாய்ப்பு குறைவு என்றே நான் கருதுகிறேன். உங்களுக்கு கோப்பையை வெல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்திருந்தால் அணியில் அடிக்கடி மாற்றங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.

முகமது ஷமி

முகமது ஷமி

மொத்தமாகவே 12 வீரர்களுக்கு தான் நீங்கள் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து அணியில் மாற்றங்களை செய்தால் அது உங்களுக்கு குழப்பத்தை மட்டுமே கொடுக்கும். டி20 உலக கோப்பையில் நிச்சயமாக நான் முகமது ஷமியை தேர்வு செய்வேன். காரணம் அவருக்கு வேகமும் பவுன்சும் இருக்கும். இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர் குல்திப் யாதவ் நிச்சயமாக அணியில் நான் தேர்வு செய்வேன்.

ராகுல் இல்லை

ராகுல் இல்லை

ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். இதனால் குல்திப் யாதவுக்கு அது சாதகமாக அமையும். கேஎல் ராகுல் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார், எனினும் இந்திய அணியில் அவரை நான் தேர்வு செய்வேன் என்று ஆர்பி சிங் குறிப்பிட்டுள்ளார்.வரும் 15ஆம் தேதிக்குள் இந்திய அணி அறிவிக்கப்பட வேண்டும்.

இதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தேர்வு குழுவினர் கூடி இந்திய அணி தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, September 11, 2022, 14:35 [IST]
Other articles published on Sep 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+