Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி விக்கெட்டை கைப்பற்ற ஐடியா கொடுத்த முன்னாள் இந்திய வீரர்..! ஆடம் சம்பா ஓபன் டாக்

Recommended Video

கோலி விக்கெட்டை கைப்பற்ற ஐடியா கொடுத்த இந்திய வீரர்..! ஆடம் சம்பா- வீடியோ

நாக்பூர்:கோலியை வீழ்த்த எனக்கு ஐடியா கொடுத்ததே இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் என்று ஆடம் சாம்பா ஓபனாக கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது இந்திய அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் சாம்பா இந்திய கேப்டன் கோலியை வீழ்த்தும் ரகசியத்தை கூறியுள்ளார். 26 வயதான சம்பா கோலியை முதல் டி20 போட்டியில் 24 ரன்னில் ஆட்டமிழக்க வைத்தார்.

கோலியின் விக்கெட்

கோலியின் விக்கெட்

ஹைதராபாத் ஒருநாள் போட்டியில் 44 ரன்னிலும் வீழ்த்தினார். இது குறித்து அவர் கூறுகையில், கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக எங்கள் அணி எப்போதும் கூடுதலான நேரங்களை எடுத்துக்கொள்வோம்.

கோலி விக்கெட் யாருக்கு?

கோலி விக்கெட் யாருக்கு?

அவரைப் போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாக்பூரில் போட்டியில் கோலி மீண்டும் என் பந்துவீச்சில் ஆட்டமிழக்காமல் இருப்பதற்காக ஏதேனும் முயற்சி எடுப்பாரா என்று தெரியவில்லை.

ஸ்ரீதரன் ஸ்ரீராம் உதவி

ஸ்ரீதரன் ஸ்ரீராம் உதவி

என்னை பொறுத்த வரையில் முதல் போட்டியைக் காட்டிலும் இன்றைய போட்டியில் நான் இன்னும் சிறப்பாக செயல்படுவேன். கோலியின் விக்கெட்டை வீழ்த்த.. இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகருமான ஸ்ரீதரன் ஸ்ரீராம் தான் உதவியாக இருந்தார்.

பந்துவீச ஐடியா

பந்துவீச ஐடியா

35 வயதான ஸ்ரீதரன் ஸ்ரீராம், இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்துவீச வேண்டும் என்று கூறினார். ஸ்ரீதரன் ஸ்ரீராமுக்கு அனுபவமும், இந்திய வீரர்களை பற்றிய அறிவும் உள்ளது. ஸ்பின்னர்கள் மூலம் இந்தியாவை எதிர்கொள்ளும் உத்தியை உருவாக்கி கொடுத்தார்.

கோலி சிறந்த வீரர்

கோலி சிறந்த வீரர்

இதேபோல் வீசிதான் கோலியின் விக்கெட்டை கைப்பற்றினேன். கோலியை பற்றிதான் அதிகமாக டீம் மீட்டிங்கில் பேசுவோம். கோலி ஒரு சிறந்த, நம்பிக்கையளிக்கக்கூடிய வீரர் என்றார் சம்பா.

Story first published: Tuesday, March 5, 2019, 10:41 [IST]
Other articles published on Mar 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+