For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாவ்!! இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு!!

மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கு முன்பு ரமேஷ் பவார் மகளிர் அணியின் தற்காலிக பயிற்சியாளராக மகளிர் டி20 உலகக்கோப்பை வரை இருந்தார்.

ரமேஷ் பவார் - மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் இடையே நடந்த சர்ச்சையால் ரமேஷ் பவார் பதவி நீட்டிப்பு பெறவில்லை.

சர்ச்சை முடிவுக்கு வருமா?

சர்ச்சை முடிவுக்கு வருமா?

பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதன் மூலம் ரமேஷ் பவார் - மிதாலி ராஜ் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என எண்ணுகின்றனர். ஆனால், ரமேஷ் பவார் மீண்டும் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

விண்ணப்பம் செய்தவர்கள்

விண்ணப்பம் செய்தவர்கள்

ரமேஷ் பவாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்படுகிறது. தற்போது இந்திய முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர், பிற நாட்டு முன்னாள் வீரர்கள் ஹெர்ஷெல் கிப்ஸ், மாஸ்கரனஸ், வங்கதேசம், பாகிஸ்தான் நாட்டு அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த டேவ் வாட்மோர் ஆகியோர் விண்ணப்பம் செய்து இருந்தனர்.

அதிரடியாக வந்த கேரி

அதிரடியாக வந்த கேரி

இவர்களில் யார் பயிற்சியாளராக வருவார்கள் என பலரும் விவாதித்துக் கொண்டு இருந்த நிலையில், அதிரடியாக இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

கேரி கிர்ஸ்டனை மறக்க முடியுமா?

கேரி கிர்ஸ்டனை மறக்க முடியுமா?

கேரி கிர்ஸ்டன் தலைமையில் தான் இந்தியா 2011 உலகக்கோப்பை வென்றது. இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் ஒரு பயிற்சியாளர் என்றால் அது கேரி கிர்ஸ்டன் தான். இது போன்ற சிறப்பு வாய்ந்த இவரை தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிப்பார்கள் என தற்போது கூறப்படுகிறது.

கேரி அனுபவம்

கேரி அனுபவம்

கேரி கிர்ஸ்டன் இந்திய அணிக்கு பயிற்சி அளித்த பின்னர் தன் சொந்த நாட்டு அணியான தென்னாபிரிக்க அணிக்கு பயிற்சி அளித்தார். தற்போது ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.

Story first published: Saturday, December 15, 2018, 17:16 [IST]
Other articles published on Dec 15, 2018
English summary
Former Indian team coach Gary Kirsten applies for the Women’s team coaching job
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+