தொடர் புறக்கணிப்பு..! வெறுத்து போய் கவுன்டி அணிக்காக இங்கிலாந்து செல்லும் தமிழக ஸ்டார் வீரர்
Recommended Video
மும்பை: இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முரளி விஜய் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார்.
இந்திய அணியில் தமிழக வீரர்களின் பங்களிப்பு என்ன என்பது ரசிகர்களுக்கு பரவலாகவே தெரியும். என்ன தான் திறமையானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு என்று நிரந்தர இடம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிட்டியிருக்கிறது.
பல தருணங்களில் திறமையான, உத்வேகம் கொண்ட வீரர்கள் இருந்தாலும் அவர்களை பயன்படுத்தும் விதம் வேறாக இருக்கிறது. ஆடும் லெவனில் இடம் பெற்றாலும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் போட்டி முடிந்தவுடன் தோல்விக்கு இவர் தான் காரணம் என்று புகார் கூற கிளம்பி விடுவார்கள்.

ஒதுக்கப்பட்ட முரளி
தமிழகத்தை சேர்ந்த் பல பேர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவராக முரளி விஜயை கூறலாம். இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்.

நிர்வாகம் பேச்சுவார்த்தை
தற்போது சேர்ந்த முரளிவிஜய், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். அங்குள்ள சோமர்செட் அணி நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

விரைவில் கையெழுத்து
தமிழக கிரிக்கெட் சங்கம் ஒப்புதல் அளித்ததும் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார். அவர் ஆடுவது உறுதி செய்யப்பட்டால் இந்த கவுண்டி சாம்பியன்ஷிப்பில் எஞ்சிய 3 ஆட்டங்களில் களம் இறங்குவார்.

சதத்தை கோட்டைவிட்டவர்
முன்னதாக, தமிழ்நாடு ப்ரீபியர் லீக் சுற்றில் திருச்சி அணியின் சார்பாக விளையாடியவர் முரளி விஜய். அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் பந்தில் அவுட்டாகி ஒரு ரன்னில் சதத்தை கோட்டை விட்டார். அந்த போட்டியில் அஸ்வினின் 16வது ஓவருக்கு முந்தைய ஓவரில் அவர் மைதானத்தில் குறும்பாக நடனமாடியதை ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள்.


Click it and Unblock the Notifications