சீரியஸ்.. தீவிர சிகிச்சை பிரிவில் கிறிஸ் கெய்ர்ன்ஸ்.. மீண்டு வர ரசிகர்கள் பிரார்த்தனை
சிட்னி: நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் தற்போது அவசர சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிறிஸ் கெய்ர்ன்ஸ்.. நியூஸிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து நிலைகளிலும் நியூசிலாந்து அணியில் ஆதிக்கம் செலுத்திய ஒரு வீரர்.
க்றிஸ் கெய்ர்ன்ஸுக்கு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சமீபத்தில் இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

சிட்னி ஹாஸ்பிடல்
இதையடுத்து, கடந்த வாரம் கான்பெர்ராவில் அவருக்கு ஒரு பெரிய இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனால், அவரது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. துளிகூட அசைவின்றி இருக்கிறார். இதனால், கவலையடைந்த குடும்பத்தினர்கள் மருத்துவர்கள் அறிவுரைப்படி, சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனைக்கு மாற்றினர்.

நிலைமை சீரியஸ்
தற்போது அவர் அந்த சிட்னி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருதய சம்பவத்தைத் தொடர்ந்து இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை நிலைத் தன்மையுடன் உள்ளது. ஆனால் சீரியஸாக இருக்கிறார்.

நிர்பந்தம்
அவரது மனைவி மெலனி கெய்ர்ன்ஸ் கூறுகையில், "கடந்த வார இறுதியில் கான்பெராவில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை கெய்ர்ன்ஸுக்கு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து சீரியஸாகவே இருந்ததால், சிட்னி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது" என்று கூறினார்.

அவசர நிலை
இதையடுத்து, நியூசிலாந்து முழுவதும் அவரது உடல்நிலை முன்னேற்றம் பெற வேண்டி ரசிகர்களும், மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். "ரசிகர்களின் இந்த அன்புக்கு நன்றி" என்று கெய்ர்ன்ஸ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். "கிறிஸ் கெய்ர்ன்ஸின் மருத்துவ அவசரநிலையைக் கேட்டு நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்" என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவிட் வைட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

33க்கு மேல் ஆவரேஜ்
க்றிஸ் கெய்ர்ன்ஸ், 1989-2006 வரை நியூசிலாந்துக்காக 62 டெஸ்ட் மற்றும் 215 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3320 ரன்கள் அடித்து, 33 க்கு மேல் ஆவரேஜ் வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி 218 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில், கெய்ர்ன்ஸ் 29.46 ஆவரேஜுடன் 4950 ரன்களையும், 201 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இரட்டை சாதனை
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு வர்ணனையும் செய்து கொண்டிருந்தார். மூன்றாவது வீரர் 200 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் எடுத்த உலகின் எட்டே எட்டு ஆல்-ரவுண்டர்களில் கெய்ர்ன்ஸும் ஒருவர். மீதமுள்ள ஏழு வீரர்களில், இயன் போத்தம் மற்றும் கபில்தேவ் (50 டெஸ்ட்) ஆகியோருக்குப் பிறகு, அதிவேகமாக.. அதாவது 58 டெஸ்ட் போட்டிகளில் இந்த 200 விக்கெட்ஸ் மற்றும் 3000 ரன்கள் எனும் இரட்டை சாதனையை கெய்ர்ன்ஸ் படைத்தார்.


Click it and Unblock the Notifications