For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாப் கிளாஸ் ஆல் ரவுண்டர்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் க்றிஸ் கெய்ர்ன்ஸ்.. ரசிகர்கள் பிரார்த்தனை

கான்பெர்ரா: நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

கிறிஸ் கெய்ர்ன்ஸ்.. இப்போது உள்ள 2k கிட்ஸ்களுக்கு இவரை நிச்சயம் தெரியாது. ஆனால், கிரிக்கெட் ஆர்வமுள்ள அனைத்து 90'ஸ் கிட்ஸுக்கும் இவரை நன்கு தெரியும்.

நியூஸிலாந்து அணியின் தரமான ஆல் ரவுண்டர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து நிலைகளிலும் நியூசிலாந்து அணியில் ஆதிக்கம் செலுத்திய ஒரு வீரர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில்

உயிருக்கு ஆபத்தான நிலையில்

இந்நிலையில், க்றிஸ் கெய்ர்ன்ஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர் தற்போது ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் life support-ல் வைக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து ஹெரால்ட் பத்திரிக்கையின் தகவலின் படி, கெய்ர்ன்ஸ் aortic dissection பாதிப்பில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடலின் முக்கிய தமனியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒத்துழைக்காத உடல்

ஒத்துழைக்காத உடல்

இந்நிலையில், அவர் சிட்னியில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் உடல்நிலை சரியில்லாமல் போனபிறகு பல அறுவை சிகிச்சைகள் செய்த போதிலும் அவரது உடல் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்று தெரியவருகிறது.

4950 ரன்கள்

4950 ரன்கள்

முன்னாள் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் க்றிஸ் கெய்ர்ன்ஸ், 1989-2006 வரை நியூசிலாந்துக்காக 62 டெஸ்ட் மற்றும் 215 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3320 ரன்கள் அடித்து, 33 க்கு மேல் ஆவரேஜ் வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி 218 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில், கெய்ர்ன்ஸ் 29.46 ஆவரேஜுடன் 4950 ரன்களையும், 201 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு வர்ணனையும் செய்து கொண்டிருந்தார்.

மூன்றாவது வீரர்

மூன்றாவது வீரர்

200 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் எடுத்த உலகின் எட்டே எட்டு ஆல்-ரவுண்டர்களில் கெய்ர்ன்ஸும் ஒருவர். மீதமுள்ள ஏழு வீரர்களில், இயன் போத்தம் மற்றும் கபில்தேவ் (50 டெஸ்ட்) ஆகியோருக்குப் பிறகு, அதிவேகமாக.. அதாவது 58 டெஸ்ட் போட்டிகளில் இந்த 200 விக்கெட்ஸ் மற்றும் 3000 ரன்கள் எனும் இரட்டை சாதனையை கெய்ர்ன்ஸ் படைத்தார்.

Story first published: Tuesday, August 10, 2021, 18:17 [IST]
Other articles published on Aug 10, 2021
English summary
Former New Zealand All-Rounder Chris Cairns - கெய்ர்ன்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+