For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SRH பயிற்சியாளரான முன்னாள் நியூசி. வீரர்.. இனிதான் ஆட்டமே இருக்கு.. காவ்யா மாறனின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

ஐதராபாத்: அண்மையில் நடைபெற்ற ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், ஐதராபாத் அணிக்கு நல்ல வீரர்களை வாங்கி போடுங்கள். காவ்யா மைதானத்தில் அப்படி சோகமாக அமர்ந்திருப்பதை பார்க்க பாவமாக இருக்கிறது என்று கலாநிதி மாறனிடம் கூறியிருந்தார். ரஜினிகாந்த் சொல்லியது போல் காவ்யா மாறன் சோகமாக இருந்ததை விடவும் ஐதராபாத் அணி பரிதாபமாக உள்ளது என்பதே நிதர்சனம்.

2023 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து இதுவரை விளையாடி வெறும் 13 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றும், 29 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

Former New Zealand Captain Daniel Vettori appointed as Sunrisers Hyderabad Head Coach in IPL 2024

புதிய கேப்டன் மார்க்ரம் ஐதராபாத் அணிக்கு மாற்றத்தை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாற்றத்தையும் அவரால் கொண்டு வர முடியவில்லை. இதன் மூலம் 2016ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றில் விளையாடிய ஐதராபாத் அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.

இதற்கு ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் குழுவும் மறைமுக காரணமாக அமைந்துள்ளது. பிரையன் லாரா, முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின் என்று ஏராளமான ஜாம்பவான் வீரர்கள் பயிற்சியாளர் குழுவில் இருந்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதனால் பயிற்சியாளர் குழுவை மாற்ற ஐதராபாத் அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியது. 2022ஆம் ஆண்டுடன் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்த டாம் மூடி பதவியில் இருந்து விலகினார்.

இதன்பின்னர் அந்த இடத்திற்கு பிரையன் லாரா நியமனம் செய்யப்பட்டார். ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக லாரா பணியாற்றிய ஒரே ஆண்டில் அவரை மாற்ற ஐதராபாத் நிர்வாகம் ஆலோசித்தது. இந்த நிலையில் ஐதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டேனியல் விட்டோரியை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் தி ஹண்ட்ரர் லீக் தொடரில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி, சிபிஎல் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணி, பிக் பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட்ஸ், வைடாலிட்டி பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக டேனிடல் விட்டோரி செயல்பட்டுள்ளார். அதேபோல் வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராகவும் டேனியல் விட்டோரி பணியாற்றி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராகவும் டேனியல் விட்டோரி செயல்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு ஆர்சிபி அணி ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது. லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர், ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில், ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக டேனியல் விட்டோரி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 7, 2023, 16:11 [IST]
Other articles published on Aug 7, 2023
English summary
IPL 2024: West Indies Legend Brian Lara sacked from the SRH Head Coach role. After this, New Zealand Former Captain Daniel Vettori appointed as the Head Coach for IPL 2024.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+