Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்து ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோ புற்றுநோயால் மரணம்

நியூசிலாந்து: நியூசிலாந்து அணியின் முன்னார் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோ புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 53.

1980 முதல் 1996 வரை நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார் மார்ட்டின் குரோ. ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பிராட்மேன் என்றால், நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோதான்.

Former New Zealand captain Martin Crowe dies aged 53

77 டெஸ்ட், 143 ஒருநாள் போட்டிகளில் குரோ ஆடியுள்ளார். 13 வருடம் நியூசிலாந்து அணிக்காக ஆடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 5444 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 17 சதமும் அடக்கம். அவருக்கு மனைவியும், 2 வளர்ப்பு பிள்ளைகளும் உள்ளனர்.

லிம்போமா எனப்படும் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார் குரோ. குரோவின் திடீர் மறைவுக்கு கிரிக்கெட் உலகம் ஆழ்ந்த அதிர்ச்சியும், இரங்கலும் வெளியிட்டுள்ளது.

2012ம் ஆண்டு குரோவுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவர் சிகிச்சைகளில் தீவிரமாக இறங்கினார். கீமோ தெரப்பியும் செய்யப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு புற்றுநோய் போய்விட்டதாக கருதப்பட்டது. ஆனால் மீண்டும் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு தெரிய ஆரம்பித்தது.

Story first published: Thursday, March 3, 2016, 13:14 [IST]
Other articles published on Mar 3, 2016
Read in English: Martin Crowe dies aged 53
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+