For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிறிஸ் கெய்ர்ன்ஸுக்கு இதயமாற்று அறுவைச்சிகிச்சை?.. உடல்நிலை குறித்து புதிய அப்டேட்.. - முழு விவரம்

இதயத்தில் பெரும் அறுவைசிகிச்சை செய்துகொண்ட நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ்-ன் உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நியூஸிலாந்து அணியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தியவர் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவருக்கு சமீபத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆபத்தான நிலை

ஆபத்தான நிலை

கான்பெர்ராவில் அவருக்கு ஒரு பெரிய இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனால், அவரது உடலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் அசைவின்றி இருந்துள்ளார். இதன் காரணமாக கவலையில் ஆழ்ந்திருந்த அவரது குடும்பத்தினர், மருத்துவர்களின் அறிவுரைப்படி, சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனைக்கு மாற்றினர்.

சிட்னி மருத்துவமனை

சிட்னி மருத்துவமனை

கடந்த ஒருவாரமாக சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு முன்னணி மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சையில் அவரது உடல்நிலை நிலைத் தன்மையுடன் உள்ளது. ஆனால் சீரியஸாக இருக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.

உடல்நிலை

உடல்நிலை

இந்நிலையில் கிறிஸ் கெய்ர்ன்ஸுன் உடல்நலம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய கெய்ர்ன்ஸுன் வழக்கறிஞர், தற்போது கிறிஸ் கெய்ர்ன்ஸ் எந்தவித உயிர்காக்கும் கருவிகளின் உதவியும் இன்றி நலமாக உள்ளார். அவர் குடும்பத்தினரை கண்விழித்து பார்த்ததோடு, அவர்களுடன் உரையாடியும் வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. கெய்ர்ன்ஸுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் அவரது குடும்பத்தினர் நன்றி கூறியுள்ளனர் என தெரிவித்தார்.

இதயமாற்று சிகிச்சை

இதயமாற்று சிகிச்சை

இது ஒருபுறம் இருக்க, கெய்ர்ன்ஸுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு கெய்ர்ன்ஸின் வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதில் உண்மை இல்லை. இதயத்தை மாற்ற வழிகள் உள்ளதாக தான் மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் தற்போதைக்கு வழங்கப்பட்டுள்ள சிகிச்சைகள் வைத்து பொறுத்திருந்து பார்த்துவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறிவிட்டார்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அனுபவ வீரர்

அனுபவ வீரர்

க்றிஸ் கெய்ர்ன்ஸ், 1989-2006 வரை நியூசிலாந்துக்காக 62 டெஸ்ட் மற்றும் 215 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3320 ரன்கள் அடித்துள்ள அவர், 33 க்கு மேல் ஆவரேஜ் வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி 218 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில், கெய்ர்ன்ஸ் 29.46 ஆவரேஜுடன் 4950 ரன்களையும், 201 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்

வர்ணனையாளர்

வர்ணனையாளர்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு வர்ணனையும் செய்து கொண்டிருந்தார். மூன்றாவது வீரர் 200 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் எடுத்த உலகின் எட்டே எட்டு ஆல்-ரவுண்டர்களில் கெய்ர்ன்ஸும் ஒருவர். மீதமுள்ள ஏழு வீரர்களில், இயன் போத்தம் மற்றும் கபில்தேவ் (50 டெஸ்ட்) ஆகியோருக்குப் பிறகு, அதிவேகமாக.. அதாவது 58 டெஸ்ட் போட்டிகளில் இந்த 200 விக்கெட்ஸ் மற்றும் 3000 ரன்கள் எனும் இரட்டை சாதனையை கெய்ர்ன்ஸ் படைத்தார்.

Story first published: Friday, August 20, 2021, 11:12 [IST]
Other articles published on Aug 20, 2021
English summary
Former New Zealand Cricketer Chris Cairns out of life support after the heart surgery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+