Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் தான் 100 நாள் பவுலிங் கோச்..!! புதிய அறிவிப்பை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த அந்த அணி

டாக்கா: நியூசிலாந்தின் முன்னாள் சுழல் ஜாம்பவானை பவுலிங் கோச்சாக நியமித்திருக்கிறது வங்கதேச அணி.

உலக கோப்பை தோல்விக்கு பிறகு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் நீக்கப்பட்டார். வங்கதேச அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் சுனில் ஜோஷி மற்றும் பாஸ்ட் பவுலிங் பயிற்சியாளர் வால்ஷ் ஆகியோரின் பதவிக்காலம் முடிந்தது.

இந் நிலையில், நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி சுழற்பந்து வீச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. தென் ஆப்ரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சார்ல் லாங்கேவெல்ட் வேகப்பந்து பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்.

100 நாட்கள் பயிற்சி

100 நாட்கள் பயிற்சி

சுனில் ஜோஷியிடம் சுழற்பந்து பயிற்சி பொறுப்பை ஏற்றுள்ள வெட்டோரி 100 நாட்கள் எனும் குறுகிய கால அடிப்படையில் சுழற்பந்து வீச்சாளர்களை மேற்பார்வையிடுவார். வேகப்பந்து வீச்சாளர் பொறுப்பான கர்ட்னி வால்ஷுக்கு பதிலாக லாங்கேவெல்ட் இருப்பார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் பாபன் தெரிவித்துள்ளார்.

பணியாற்ற முடிவு

பணியாற்ற முடிவு

இதுகுறித்து நஸ்முல் ஹாசன் கூறியதாவது: வெட்டோரியுடன் நாங்கள் இன்னும் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. ஆனாலும், அவர் எங்களுடன் பணியாற்ற ஒப்புக் கொண்டார். லாங்கேவெல்ட்டிடமிருந்தும் எங்களுக்கு உறுதிப்படுத்தல் கிடைத்தது என்று கூறினார்.

இந்திய சுற்றுப்பயணம்

இந்திய சுற்றுப்பயணம்

பிளாக் கேப் போட்டியாளர்களின் சாதனை நாயகன் விட்டோரி, நவம்பர் மாதம் இந்திய சுற்றுப்பயணத்துடன் வங்கதேசம் தொடங்கும் தொடரில் துவங்கி, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக டி20 வரை வங்கதேச பயிற்சியாளராக பணியாற்றுவார் எனவும் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் வெட்டோரி.

ஐபிஎல்லில் கோச்

ஐபிஎல்லில் கோச்

அதன் பின்னர் டேனியல் வெட்டோரி, சர்வதேச அணிகளின் பயிற்சியாளராக செயல்படவில்லை என்றாலும் ஐபிஎல் உள்ளிட்ட டி 20 லீக்குகளில் கோச்சாக இருந்திருக்கிறார். அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், பிக் பிளாஸ் அணி பிரிஸ்பேன் ஹீட் அணிக்கும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார்.

Story first published: Sunday, July 28, 2019, 16:14 [IST]
Other articles published on Jul 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+