For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்..இந்த முறையும் போச்சா...அதிர்ச்சி தரும் முன்னாள் வீரரின் கணிப்பு

நியூசிலாந்து: சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் கணிப்பை முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் எந்தெந்தந்த அணிகள் எந்த இடத்தை பிடிக்கும் என முன்னாள் வீரர் கணித்திருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக உள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

கடந்தாண்டு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் பெரிய அளவில் மிஸ் செய்த நிலையில் இந்தாண்டு இந்தியாவில் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை சிறப்பாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. டெல்லி அணி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியடைந்தது. எனவே இந்த முறை அனைத்து அணிகளும் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளதால் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

முதல் முறை

முதல் முறை

ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள்

இந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால் இந்த அணிகள் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இதனால் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணியில் பல வீரர்கள் புதிதாக களமிறக்கப்பட்டுள்ளனர். அதே போல டெல்லி அணிக்கு புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கம்பேக் கொடுக்க வேண்டும்

கம்பேக் கொடுக்க வேண்டும்

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்தாண்டு ப்ளே ஆப்க்கு கூட செல்லாமல் சொதப்பியது. இதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனுக்கு பிறகு கோப்பையை வெல்லவில்லை. இதே போல கொல்கத்தா அணி 2014ம் ஆண்டுக்கு பிறகும் ஐதரபாத் அணி 2016ம் ஆண்டுக்கு பிறகும் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை.

ஸ்டாக் கணிப்பு

ஸ்டாக் கணிப்பு

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் இந்தாண்டு ஐபிஎல் குறித்து கணித்துள்ளார். அதன்படி தோனியின் சி.எஸ்.கே அணி இந்த முறையும் கடைசி இடத்தை பிடித்து சொதப்பும் என கூறியுள்ளார். அதே வேளையில் மும்பை அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்றும் டெல்லி அணி 2ம் இடம் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ப்ளே ஆஃப்

ப்ளே ஆஃப்

பஞ்சாப் அணியில் வீரர்கள் தேர்வு சிறப்பாக உள்ளதால் இந்த முறை 3வது இடம் பிடிக்கும் எனவும் ஐதராபாத் அணி 4வது இடத்தை பிடிக்கும் எனவும் ஸ்காட் தெரிவித்துள்ளார். அதே வேளையில் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பெங்களூர் அணி 5வது இடத்தையும், ராஜஸ்தான் அணி 6வது இடத்தையும் கொல்கத்தா 7வது இடத்தையும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 2, 2021, 18:28 [IST]
Other articles published on Apr 2, 2021
English summary
Former NZ All Rounder Scott Styris reveals his prediction for IPL 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+