Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை பார்த்து அந்த பாகிஸ்தான் வீரர் கற்க வேண்டும்.. அதுதான் சிறந்தது.. முன்னாள் வீரர் அட்வைஸ்!

இந்திய வீரர் விராட் கோலியை பார்த்து பாகிஸ்தான் இளம் வீரர் பேட்டிங் முறையை கற்க வேண்டும் என அந்நாட்டு முன்னாள் வீரர் முகமது யூசப் அறிவுரை கூறியுள்ளது.

கிரிக்கெட் உலகில் விராட் கோலியின் கிளாசிக் பேட்டிங் ஸ்டைல் சீனியர் வீரர்கள் பலரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக விராட் கோலியின் கவர் ட்ரைவுக்கு ரசிகர்கள் ஏகபோகத்திற்கு உள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளம் வீரர் அசாம் காண், பேட்டிங்கில் விராட் கோலியின் முறையை பார்த்து கற்றுக்கொண்டால் மிகச்சிறப்பான வீரராக வருவார் என முகமது யூசப் கூறியுள்ளார்.

இளம் வீரர்

இளம் வீரர்

பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொயின் கானின் மகன் தான் அசாம் கான். 22 வயதாகும் இவர் தனது முதல் பிஎஸ்எல் தொடரிலேயே அனைவரையும் வியக்கவைத்தார். கட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக பங்கேற்ற அவர், உடல் எடை சற்று அதிகமானவராக இருந்தாலும், பேட்டிங் அதிரடியால் பல வீரர்களுக்கு ஆச்சரியம் அளித்தார்.

சிறப்பான டிரைவ் ஷாட்

சிறப்பான டிரைவ் ஷாட்

இந்நிலையில் இவரின் பேடிங் குறித்து பேசிய முகமது யூசப், அசாம் கான் மிக இளம் வீரர் ஆவார். முதல் தர கிரிக்கெட்டில் தற்போதுதான் தனது முதல் சீசனில் விளையாடியுள்ளார். அவரின் கவர் டிரைவ் ஷாட்கள் மிகவும் அற்புதமாக உள்ளது. அதே போல சிக்ஸர்கள் அடிக்க மிக ஆர்வமாக உள்ளார். இந்த சீசனில் அவரின் கடின உழைப்பை பார்க்க முடிந்தது.

அட்வைஸ்

அட்வைஸ்

அவரின் ஆட்டத்தை மேம்படுத்த முதலில் உடல் எடையை குறைக்க வேண்டும். அதே போல அவரின் பேடிங்கில் சிறிது மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். சிக்ஸர்கள் முக்கியம் தான். ஆனால் அதற்கு சரியான நேரங்களில் மட்டும் தான் சிக்ஸர்களுக்கு செல்ல வேண்டும். ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்து வருகிறது என்றால் அந்த நேரத்தில் பெரிய ஷாட்கள் தேவை இல்லை.

உதாரணம் கோலி

உதாரணம் கோலி

இந்த விஷயத்தை அசாம் காண், இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன் போன்றவர்களிடம் இருந்த கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சரியான நேரத்தில் சிக்ஸர்கள் அடித்து தான் தற்போது வரை அவர்கள் விளையாடி வருகிறார்கள் எனக்கூறியுள்ளார். இதில் விராட் கோலி கிளாசிக் ஷாட்களுக்கு மிகவும் புகழ்பெற்றவர். தொடர்ந்து டிரைவ் ஷாட்கள் மற்றும் பவுண்டரிகள் மூலம் மட்டுமே ரன் சேர்க்கும் கோலி, தேவைப்பட்டால் மட்டும் தான் சிக்ஸர் விளாசுவார்.

Story first published: Friday, May 21, 2021, 20:41 [IST]
Other articles published on May 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+