
வெற்றி வாய்ப்பு
நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுக்க, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்தது. பிறகு இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸில் கேப்டன் என்னதான் இங்கிலாந்து வலிமையான பவுலிங் லைன் அப் கொண்டிருந்தாலும், இந்தியா நிச்சயம் இந்த டார்கெட்டை 9 விக்கெட்டை இழந்தாவது எட்டியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். இத்தனைக்கும் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. ஸோ, கடைசி நாளில் நிறுத்து நிதானமாக விளையாடியிருந்தாலே இந்தியா ஜெயித்திருக்கும். அப்படியொரு அருமையான வாய்ப்பு இந்தியாவுக்கு கை நழுவிப் போனது.

கோலி டென்ஷன்
உண்மையில், தோல்வியில் இருந்து இங்கிலாந்து கிரேட் எஸ்கேப் என்றே சொல்ல வேண்டும். இதுகுறித்து பேசிய கேப்ட கோலி, "இது வெட்கக் கேடானது. நாங்கள் 3வது மற்றும் நான்காம் நாளில் மழையை எதிர்பார்த்திருந்தோம், ஆனால் அது ஐந்தாம் நாளில் வரத் தேர்வு செய்துவிட்டது. இலக்கை எட்டுவதில் நாங்கள் நல்ல நிலையில் இருப்பதாக நினைத்தோம். இதைத்தான் நாங்கள் செய்ய விரும்பினோம்: இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் வலுவாக தொடங்க விரும்பினோம். ஐந்தாவது நாளில் எங்களுக்கு முன்னால் பல நல்ல வாய்ப்புகள் இருந்தன. இலக்காக 150 ரன்கள் மட்டும் இருக்கும் போது, ஒரேயொரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தால் போதும் வெற்றிப் பெறுவதற்கு. முதல் டெஸ்ட்டில் நாங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே உணர்ந்தோம். ஆனால், ஐந்தாவது நாளை எங்களால் நிறைவு செய்ய முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. நாங்கள் நன்றாக பந்து வீசினோம், போட்டியில் நிலைத்திருக்க போதுமான அளவு பேட்டிங் செய்தோம், ஆட்டத்தில் முன்னிலையில் இருந்தோம்" என்று தனது வேதனையை, கடுப்பை கொட்டித் தீர்த்திருந்தார்.

ரசிகர்களை கவர்ந்த சிராஜ்
இது ஒருபக்கம் இருந்தாலும், இந்திய அணியின் முகமது சிராஜ் அனைவரையும் கவனிக்க வைத்துவிட்டார். தனது வேகப்பந்துவீச்சின் மூலம் முன்னணி வீரர்கள் பலரையும் வியப்படைய வைத்துவிட்டார். இந்த டெஸ்ட் போட்டியில் அவர் மொத்தமாகவே 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருந்தாலும், தனது அபாரமான கன்சிஸ்டன்சி, பயமறியா குணம், எதிரணி வீரர்களை வம்பிழுப்பது, எதற்கும் அஞ்சாமல் சளைக்காமல் பந்து வீசுவது என்று ரசிகர்கள் விரும்பும் அத்தனை கமர்ஷியல் குணம், எபிலிட்டி கொண்ட பவுலராக உருவெடுத்துவிட்டர்.

பாராட்டு
இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் முகமது சிராஜை வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர், "முகமது சிராஜ் டெஸ்ட் மட்டத்தில் ஒப்பீட்டளவில் அனுபவமற்றவராக இருக்கலாம். ஆனால் அவர் முதல்தர கிரிக்கெட்டில் நிறைய விளையாடியுள்ளார். தவிர, இந்திய ஏ அணி சுற்றுப்பயணங்களிலும் நிறைய விளையாடியுள்ளார். அவர் பந்துவீசும் விதம், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதியவர் போல் தெரியவில்லை.

வெற்றிக்கு காரணம்
"என்ன லைனில் பந்து வீச வேண்டும் என்பது அவருக்குத் தெரிகிறது. அவர் இளமையாகவும் வேகமாகவும் இருக்கிறார். அவர் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் விடுக்கிறார், முதுகை வளைத்து பவுன்சர்களை வீசினார். நல்ல உயரமாகவும் வலிமையானராகவும் இருக்கிறார். சிராஜ் எதிர்காலத்தில் நிச்சயம் ஒரு சிறந்த வீரராக உருவெடுக்க வாய்ப்புள்ளது. அவர் அணிக்கு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். அவர் இந்த அணியில் நன்றாக பொருந்துகிறார். முதல் டெஸ்ட் போட்டிக்காக இஷாந்த் ஷர்மா தகுதியுள்ளவரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் சிராஜ், ஷர்துல் தாக்கூர் போலவே மிகவும் சுவாரஸ்யமான பவுலராக இருந்தார். அவர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு பெரியளவில் உதவியாக இருந்தனர். வேகப்பந்து வீச்சாளர்களால்தான் இந்தியா வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெறத் தொடங்கியது" என்று பட் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











