Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘கப் கிடைக்காது பிகிலு'.. இந்திய அணியில் பெரும் குறை.. டி20 உலகக்கோப்பைகாக பாக்.சீனியர் எச்சரிக்கை!

மும்பை : டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்லவதற்கு ஒரு முக்கிய காரனம் தடையாக அமையும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் எச்சரித்துள்ளார்.

ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய டி20 அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது.

கடந்த நவம்பரில் இருந்து தற்போது வரை நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என அடுத்தடுத்து வைட் வாஷ் செய்துள்ளது.

இந்திய அணி பலம்

இந்திய அணி பலம்

இதனால் டி20 உலகக்கோப்பையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் மற்றும் ஆல்ரவுண்டர்களின் பிரச்சினை பெரிதாக இருந்தது. தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் - சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர் போன்றவர்களால் அந்த பிரச்சினை தீர்ந்துள்ளது.

குறைக்கூறிய சல்மான்

குறைக்கூறிய சல்மான்

ஆனால் தற்போதும் கூட இந்திய அணியில் பெரும் பிரச்சினை உள்ளதாக சல்மான் பட் கூறியுள்ளார். அதில், இந்திய அணியின் பேட்டிங் மிகச்சிறப்பாக உள்ளது. ஆனால் பவுலிங்கில் அவர்களிடம் முழுமையான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. டி20 கிரிக்கெட்டில் மீடியம் பேஸர்களால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. எவ்வளவு வித்தியாசங்களை காட்டினாலும், அங்கு எடுபடாது.

ஆஸ்திரேலிய களம்

ஆஸ்திரேலிய களம்

அதுவும் ஆஸ்திரேலியா போன்ற களங்களில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக் ஆகியோரை போன்று இன்னும் சில வீரர்களை தயார்படுத்த வேண்டும். ஏனென்றால் 135கிமீ வேகத்திற்கு கீழ் வீசுவதே ரன்களை வாரி வழங்கிவிடும். எனவே குறைந்தது 140 கிமீ வேகம் தேவை.

Recommended Video

IND vs SL : T20 Cricket-ல் புதிய சாதனை படைத்த Rohit Sharma
கோப்பை கடினம் தான்

கோப்பை கடினம் தான்

எனவே இந்திய அணி பேட்டிங்கை விட, தற்போது பவுலிங்கில் கவனம் செலுத்த வேண்டும். முழுமையான வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து, அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் டி20 உலகக்கோப்பையை வெல்வது கடினமான ஒன்றாகவே தான் இருக்கும் என சல்மான் பட் கூறியுள்ளார்.

Story first published: Monday, February 28, 2022, 12:53 [IST]
Other articles published on Feb 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+