Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“டெஸ்ட் வெற்றிக்கு கோலி - ரவிசாஸ்திரி காரணம் இல்லங்க”.. பாக். வீரர் கூறிய உண்மை.. சரிதானோ?

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் தொடர் வெற்றிகளுக்கு பின்னால் பிசிசிஐ போட்டு வைக்கும் சிறிய திட்டம் தான் காரணமாக உள்ளது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி அவ்வபோது சொதப்பினாலும், டெஸ்ட் தொடரில் அசுர பலத்துடன் வலம் வருகிறது.

செல்லும் இடம்மெல்லாம் வெற்றி என்பது போல அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளது.

அயல்நாட்டு வெற்றிகள்

அயல்நாட்டு வெற்றிகள்

கடந்த 2018 - 2019ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதன்பின்னர் கடந்த 2020 - 21ம் ஆண்டுகளின் போதும் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே சாய்த்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு சென்ற இந்திய வீரர்கள் அங்கு 2 - 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தினர். இந்த வரிசையில் அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது.

ரசிகர்கள் நம்புவது

ரசிகர்கள் நம்புவது

வேறு எந்த அணிகளும் இதுபோன்று வெற்றி பெற்றதில்லை. இந்தியாவின் இந்த சாதனைக்கு காரணம் விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி தான் என ரசிகர்கள் பெருமிதம் கொண்டனர். இந்நிலையில் அதற்கு காரணம் அவர்கள் அல்ல, பிசிசிஐ போட்டு வரும் சிறிய திட்டம் தான் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.

 அப்படி என்ன திட்டம்

அப்படி என்ன திட்டம்

இதுகுறித்து பேசிய அவர், எதிர்கால பயணங்களுக்காக இந்தியா முன்கூட்டியே தயாராகிறது. அதாவது இந்தியாவின் 'ஏ' அனைத்து அயல்நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் மூலம் இளம் வீரர்கள் அதிலேயே தயாராகி விடுவதால் முதல் தர கிரிக்கெட்டிற்கு வரும்போது சுலபமாக உள்ளது.

சிராஜின் மறுபக்கம்

சிராஜின் மறுபக்கம்

உதாரணத்திற்கு முகமது சிராஜை எடுத்துக்கொள்ளலாம், அவரின் பெரும்பாலான முதல் தர ஆட்டங்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்தது. இதன் மூலம் அயல்நாட்டு களங்களை நன்கு அறிந்துள்ளார். இந்தியாவை போன்று வேறு எந்த அணியும் செய்வதில்லை. இதுவே இந்திய அணியின் அயல்நாட்டு வெற்றிகளுக்கு முக்கிய காரணம்.

Story first published: Saturday, December 18, 2021, 20:35 [IST]
Other articles published on Dec 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+