Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன ?

லாகூர்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஒருவர் திடீர் மாரடைப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் அக்.

3 வடிவ கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் இன்சமாமும் டாப் இடங்களை பிடித்துள்ளார்.

மாரடைப்பு

மாரடைப்பு

இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று அதிகாலை லாகூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்த இன்சமாம், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கும் சூழலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடைசி கட்டத்தில் சிகிச்சைப் பார்க்கப்பட்டுள்ளது.

3 நாட்கள் அவதி

3 நாட்கள் அவதி

கடந்த 3 நாட்களாகவே இன்சமாம் உல் ஹக்கிற்கு லேசான நெஞ்சு வலி இருந்து வந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு எந்தவித பிரச்னையும் இல்லாதது போன்று இருந்தது. ஆனால் இன்று காலை எடுக்கப்பட்ட பரிசோதனையில் தீவிர மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைகாக அவசரமாக கொண்டுச் செல்லப்பட்டார்.

 உடல்நிலை விவரம்

உடல்நிலை விவரம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி (angioplasty) சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் விரைவில் நலம்பெற கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வாழ்க்கை

கிரிக்கெட் வாழ்க்கை

51 வயதான இன்சமாம் உல் ஹக், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தவர். 375 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11,701 ரன்களை எடுத்துள்ளார். 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,829 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை பதவி வகித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 28, 2021, 11:00 [IST]
Other articles published on Sep 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+