ஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது!
Recommended Video
இஸ்லாமாபாத் : சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் நசீர் ஜாம்ஷெட், கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய குற்றத்தை மறுத்துவந்த நிலையில், தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போல பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சூதாட்ட புகாரில் ஜாம்ஷெட் சிக்கிய நிலையில், இவர்மீது சாட்டப்பட்ட குற்றம் தொடர்பான விசாரணை பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் விசாரணை நடத்தி, அவர் அனைத்துவிதமாக கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க பத்து ஆண்டுகள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்
கடந்த 2017ல் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின்போது சூதாட்டப் புகாரில் சிக்கினார் அந்நாட்டு வீரர் நசீர் ஜாம்ஷெட். இவருடன் பாகிஸ்தானின் ஷர்ஜீல் கான், காலித் லதீப்பும் சூதாட்ட புகாரில் சிக்கினர்.

சூதாட்ட புகாரில் சிக்கிய ஜாம்ஷெட்
இதேபோல கடந்த 2016ல் நடைபெற்ற வங்கதேச பிரீமியர் லீக் தொடரிலும் இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் விசாரணை
இந்த சூதாட்ட புகார் குறித்து ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் விசாரணை மேற்கொண்டு, ஜாம்ஷெட் உள்ளிட்ட வீரர்களுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

மற்ற வீரர்களுக்கு 5 ஆண்டு தடை
இந்நிலையில், நசீர் ஜாம்ஷெட் உள்ளிட்ட வீரர்களின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டில் ஜாம்ஷெட்டிற்கு 10 ஆண்டுகளும் மற்ற இரு வீரர்களுக்கு 5 ஆண்டுகளும் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது.

பிப்ரவரி மாதத்தில் தண்டனை
பிரிட்டனின் மான்செஸ்டர் நீதிமன்றத்தில் இந்த புகாரின்மீதான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக குற்றச்சாட்டை மறுத்துவந்த ஜாம்ஷெட் மீதான குற்றச்சாட்டு, தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாம்ஷெட் உள்ளிட்ட மூவருக்கும் வரும் பிப்ரவரி மாதத்தில் தண்டனை அளிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications