Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த விஷயத்தில் பாக். விட இந்தியா மேல்... பார்த்துக் கத்துக்கனும்.. முன்னாள் வீரர் சல்மான் பட்

பாகிஸ்தான்: இந்திய கிரிக்கெட் வாரியத்தை பார்த்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.

Recommended Video

இந்த விஷயத்தில் India-வை பார்த்து Pakistan கற்றுக்கொள்ள வேண்டும் - Salman Butt

இந்திய கிரிக்கெட்டில் தற்போது அதிகளவில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான முதல் போட்டியிலேயே வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.

உதாரணத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கூட சூர்யகுமார் யாதவ் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் தங்களது முதல் சர்வதேச போட்டியிலேயே அரைசதம் விளாசினர்.

பிசிசிஐ முயற்சி

பிசிசிஐ முயற்சி

இது போன்ற வாய்ப்புகளை தொடர்ந்து வழங்க பிசிசிஐ புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்தியாவின் சீனியர் வீரர்கள் பங்கேற்கின்றனர். அதே போல ஐபிஎல் தொடரில் கலக்கிய வீரர்களை கொண்டு இந்தியாவின் 2வது அணி உருவாக்கப்படவுள்ளது. இந்த அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

பிசிசிஐ-ன் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், சல்மான் பட்டும் அதில் இணைந்துள்ளார். இந்தியாவின் கிரிக்கெட் பாலிசி மிகச்சிறப்பானது. இந்தியாவுக்கு அறிமுகமாகும் வீரர்கள் சிறந்த அனுபவங்களை பெற்றுள்ளார்கள். முதல் தர கிரிக்கெட்டில் 40 - 50 போட்டிகளில் விளையாடியிருப்பார்கள். பல அனுபவங்களை பெற்ற பிறகு தான் இந்திய அணிக்குள் நுழைகிறார்கள். .

வீரர்களின் பக்குவம்

வீரர்களின் பக்குவம்

இந்திய வீரர்கள் உள்நாட்டு போட்டிகள் மூலமே பிரபலமடைந்து விடுகின்றனர். ஆனால் அப்படியும் வெகு சிலருக்கு, வெகு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் அணிக்குள் வரும் போது அப்படி ஒரு பக்குவத்தை பார்க்கமுடியும். அவர்களை மீண்டும் உள்நாட்டு போட்டிகளுக்கே திருப்பி அனுப்புவது என்பது மிக அறிதாக தான் பார்க்க முடிகிறது.

பாகிஸ்தானின் பாலிசி

பாகிஸ்தானின் பாலிசி

ஆனால் பாகிஸ்தானில் அப்படி ஒன்றுமே கிடையாது. இங்கு ஒரு வீரர் உள்நாட்டு தொடரில் சிறப்பாக செயல்பட்டுவிட்டால் போதும், அவர் குறித்த பேச்சுக்கள் அவ்வளவு பெரிதாக இருக்கும். இதனால் உடனடியாக சர்வதேச போட்டிக்குள் கொண்டு வரப்படுகிறார்கள். அனுபவம் குறைந்த வீரர்கள் என்பதால் சர்வதேச போட்டிகள் படு மோசமாக திணறுகிறார்கள். பின்னர் அந்த வீரரிடம் அது சரியல்ல, இது சரியல்ல எனக்கூறி மீண்டும் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே பாகிஸ்தான் அணி இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 28, 2021, 21:27 [IST]
Other articles published on May 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+