Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷேன் வார்னேவின் முக்கிய ரகசியம்..!! பொதுவெளியில் போட்டுடைத்த அனில் கும்ப்ளே.. இவ்வளவு நடந்திருக்கா?

மொஹாலி: ஷேன் வார்னே குறித்தும் ஆஸ்திரேலிய அணி குறித்தும் யாருக்கும் தெரியாத ரகசியத்தை இந்திய வீரர் அனில் கும்ப்ளே போட்டுடைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

தாய்லாந்து சென்றிருந்த அவர், விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

வார்னேவின் மறைவு

வார்னேவின் மறைவு

ஷேன் வார்னேவின் மறைவு செய்தியை கேட்டு கிரிக்கெட் உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வார்னேவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பல கிரிக்கெட் பிரபலங்கள், வார்னேவுடனான பல்வேறு நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே முக்கிய ரகசியத்தை உடைத்துள்ளார்.

 ரகசியத்தை கூறிய கும்ப்ளே

ரகசியத்தை கூறிய கும்ப்ளே

வார்னேவுக்காக ஆஸ்திரேலிய அணி எப்படி செயல்படுவது என்பதில் சுவாரஸ்யமாக இருக்கும். களத்திற்கு செல்லும் எதிரணி பேட்ஸ்மேன் வார்னேவின் நண்பர் எனத் தெரிந்தால், அவரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியளவில் ஆஸ்திரேலிய வீரர்கள் அச்சுறுத்தல் கொடுக்க மாட்டார்கள். மிகவும் நட்பு ரீதியான போட்டி தான் அங்கு நடக்கும்.

எனக்கு நேர்ந்த சம்பவம்

எனக்கு நேர்ந்த சம்பவம்

ஒருமுறை நானும் பேட்டிங்கிற்கு சென்ற போது பார்ட்னர்ஷிப் அமைத்தேன். ஆனால் வார்னேவின் நண்பன் என்பதால் எனக்கு பெரியளவில் ஆஸ்திரேலிய வீரர்கள் வம்பிழுக்கவில்லை. ஜாலியாக போட்டி நடந்தது. தனது நட்பு வட்டாரத்தை ஷேன் வார்னே இப்படி தான் பாதுகாப்போடு பார்த்துக் கொள்வார்.

சச்சினுடனான நட்பு

சச்சினுடனான நட்பு

பொதுவாக சச்சின் - வார்னே விளையாடுவது சுவாரஸ்யமாக இருக்கும். 1998ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தபோது, முதல் இன்னிங்ஸில் சச்சினை வீழ்த்தி ஷேன் வார்னே சிறப்பாக ஆடினார். ஆனால் 2வது இன்னிங்ஸில் வார்னேவை வீழ்த்தி சச்சின் சிறப்பாக விளையாடினார். இப்படி தான் எங்களின் நட்பு இருக்கும் என அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

Story first published: Saturday, March 5, 2022, 19:08 [IST]
Other articles published on Mar 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+