என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.. பிசிசிஐ மீது காண்டான கங்குலி.. காரணம் இவர் தான்..?
மும்பை: எதை வேண்டுமானாலும் ஆதாயம் தரும் பதவி என்பதா என்று பிசிசிஐக்கு தாதா சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தில், ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரம் மறுபடியும் பிரச்னையை கிளப்பி இருக்கிறது. ராகுல் டிராவிட் விஷயத்தில் இந்த பிரச்னை விஸ்வரூபமாகி இருக்கிறது.
சமீபத்தில் ராகுல் டிராவிட்டின் இந்தியா சிமெண்ட்ஸ் பதவியை வைத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது பிசிசிஐ. அதற்கு முன்னாள் வீரர்கள் உள்பட பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்திய கிரிக்கெட்டுக்கு கேடுகாலம் வந்திருக்கிறது என்று தாதா கங்குலி விமர்சித்திருந்தார்.

காட்டமான கேள்விகள்
இந்நிலையில் மீண்டும் இது தொடர்பாக பிசிசிஐக்கு காட்டமாக பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அவர் கூறியதாவது: முன்னாள் வீரர்களுக்கு விதிவிலக்கு கேட்க வில்லை. மாறாக, விதிகள் சரியாக இருக்க வேண்டும்.

உதற முடியாது
டிராவிட் இப்போது, தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்சியாளர். நாளையே அவர் வேறு ஒரு பொறுப்பில் இருக்கலாம். அதற்காக பணிப்பொறுப்பை உதற முடியுமா? இந்தியா சிமெண்ட்ஸ் வேலை நிரந்தரமானது. ஆகவே நடைமுறைக்கு ஏற்ப தீர்வு காண வேண்டும்.

சொல்ல முடியாது
வர்ணனை, பயிற்சியளிப்பது கூட ஆதாயம் தரும் இரட்டைப் பதவி என்று கூற முடியாது. ரிக்கி பாண்டிங்கை பாருங்கள், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பயிற்சியாளராக உள்ளார். உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக பணியாற்றினார். ஆஷஸ் தொடரில் வர்ணனை செய்கிறார். மீண்டும் அடுத்த ஆண்டு டெல்லி கேப்பிடல்சுக்கு திரும்பி வருவார்.

விளாசிய கங்குலி
இதை ஆதாயம் தரும் பதவி இல்லை. அவரது திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம். எது இரட்டை பதவி என்பதை வரையறுக்க வேண்டும் இல்லையெனில் எதை வேண்டுமானாலும் ஆதாயம் தரும் இரட்டை பதவி என்று கூறிக் கொண்டு இருக்கலாம் என்று விளாசி இருக்கிறார் கங்குலி.


Click it and Unblock the Notifications