Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மூளையிருக்கா? ரிவியூ வேஸ்ட் பண்ணி, வெற்றியை கோட்டை விடுவ..? ஒரு கேப்டனை அல்லுவிட்ட ஜாம்பவான்

Recommended Video

பென் ஸ்டோக்ஸ் மரண அடி.. இங்கிலாந்து வெற்றியை வரலாறு பேசும்- வீடியோ

லீட்ஸ்: ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட்டை எளிதாக வெல்லாமல் கோட்டை விட்ட ஆஸி. கேப்டன் டம் பெய்னுக்கு வசவுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. முட்டாள் கேப்டன் என்றெல்லாம் முன்னாள் ஜாம்பவான்கள் விமர்சிக்க ஆரம்பித்து இருக்கின்றன.

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வெல்ல, 2வது போட்டி டிராவானது. லீட்ஸில் நடந்த 3வது போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது. காரணம் பென் ஸ்டோக்ஸ் என்ற ஒற்றை மனிதரின் ருத்ரதாண்டவ ஆட்டம் தான்.

2 இன்னிங்சிலும் சேர்த்து, ஆஸி. அணி 358 ரன்கள் முன்னிலை பெற்றது. 359 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறும். ஆனால் இத்தகைய சேசிங்கை இங்கிலாந்து இதற்கு முன்பாக சாதித்தது இல்லை. எனவே, போட்டி நாளன்று விறுவிறுப்பு அதிகரித்தது.

9 விக்கெட்டுகள் அவுட்

9 விக்கெட்டுகள் அவுட்

359 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, 286 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிய, நிதானமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் புயலாக மாறினார். கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தாலும், ரிஸ்க் எடுத்து அடித்து ஆடினார்.

73 ரன்கள் வேண்டும்

73 ரன்கள் வேண்டும்

9 விக்கெட்டுகள் விழுந்துவிட்டன. ஒரு விக்கெட் மட்டுமே இருக்க, இங்கிலாந்து வெற்றிக்கு 73 ரன்கள் தேவை. அதில் ஒரு ரன் மட்டுமே கடைசி வீரராக களம் இறங்கிய ஜாக் லீச் அடித்தார். மற்ற ரன்கள் அனைத்துமே அடித்தது மாவீரன் ஸ்டோக்ஸ் தான்.

வீணான ரிவியூ

வீணான ரிவியூ

தனி ஒருவனாக ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடியிருந்தாலும், அவர் அவுட்டாகியிருக்க வேண்டியவர். ரிவியூ மீதமில்லாததால் அவரது விக்கெட்டை ஆஸ்திரேலியா எடுக்க முடியாமல் போனது. நாதன் லயன் வீசிய பந்து ஒன்றில், ஸ்டோக்ஸ் எல்பிடபிள்யூ ஆனார். அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.

அடித்தது அதிர்ஷ்டம்

அடித்தது அதிர்ஷ்டம்

ஆனால் ரிப்ளேவில் அது அவுட் என்பது தெரிந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு ரிவியூ மீதமில்லாததால், ஸ்டோக்ஸ் எஸ்கேப். இங்கிலாந்து வெற்றி பெற்றதற்கு முந்தைய ஓவரில் தான் நடந்தது இந்த சம்பவம். இங்கிலாந்து வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தான் ஸ்டோக்ஸ் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

வெற்றி பறிபோனது

வெற்றி பறிபோனது

ஆஸ்திரேலிய அணியிடம் அப்போது மட்டும் ஒரு ரிவியூ இருந்திருந்தால் கதையே வேறு. ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் ரிவியூ இல்லை. வெற்றி பறிபோனது. இந்த சம்பவத்திற்கு முன்னதாக ஒரு சம்பவம் அரங்கேறியது.

கடுமையான விமர்சனம்

கடுமையான விமர்சனம்

லீச்சின் கால்காப்பில் பந்து பட்டதற்கு ஆஸ்திரேலியா ரிவியூ செய்தது. அது லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாக தெரிந்தும், தேவையில்லாமல் ரிவியூ எடுத்து வீண் பண்ணினார். டிம் பெய்னின் அந்த செயலை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

மூளையில்லையா?

மூளையில்லையா?

இதுகுறித்து கருத்து இயன் சேப்பல் கூறியிருப்பதாவது: லீச்சின் கால்காப்பில் பட்டது, லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன பந்து என்பது தெளிவாக தெரிந்தது. அதற்கு எதற்கு ரிவியூ? அந்த நேரத்தில் டிம் பெய்ன் மூளையை இழந்துவிட்டார். மூளையில்லாதவர் நடவடிக்கை என்று கடும் வார்த்தைகளை பிரயோகித்து இருக்கிறார்.

Story first published: Tuesday, August 27, 2019, 10:32 [IST]
Other articles published on Aug 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+