ஃபார்ம் நீடிப்பது சந்தேகம் தான்.. ஹர்திக் பாண்ட்யா குறித்து அசாருதீன் பேச்சு.. என்ன காரணம்!
மும்பை: இந்திய அணிக்காக ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடுவாரா என்பது சந்தேகம் தான் என முன்னாள் வீரர் அசாருதீன் கூறியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக விளங்கிய ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் தொடர் மூலம் கம்பேக் கொடுத்தார்.
குஜராத் அணியின் கேப்டனாக கோப்பை வென்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் தரமான கம்பேக் தந்தார்.

பாண்ட்யா கம்பேக்
ஐபிஎல் 2022 தொடரில் 17 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்ட்யா 487 ரன்களை குவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிக ரன் அடித்தவர் இவர்தான் ஆகும். பந்துவீச்சை பொறுத்தவரையில் சகஜமாக 140+ கிமீ வேகத்தில் பந்துவீசினார். மேலும் 8 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து மீண்டும் இந்திய அணிக்கு அவர் திரும்பியுள்ளார்.

அசாருதீன் பேட்டி
இந்நிலையில் அவரின் ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர் அசாருதீன் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா திறமையான வீரர் தான். இந்திய அணியின் வெற்றிகளுக்கு உதவிய போதும், காயத்தால் தொடர்ச்சியாக அணியில் இடம்பெறவில்லை. தற்போது 4 ஓவர்கள் வீசி கம்பேக் தந்திருப்பது மகிழ்ச்சி தான். ஆனால் அதில் தான் ஒரு சிக்கல் உள்ளது.

அசாருதீன் சந்தேகம்
ஹர்திக் பாண்ட்யா எத்தனை நாட்களுக்கு தொடர்ச்சியாக இதே ஃபார்மில் இருப்பார் என்பது தெரியவில்லை. 4 ஓவர்களை வீசுவாரா என்பது சந்தேகம் தான். எனினும் ஒரு ஆல்ரவுண்டராக இவர் அணியில் எடுக்கும் போதெல்லாம் பவுலிங் செய்ய வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையாக உள்ளது.

பாண்ட்யா பதில்
இது ஒருபுறம் இருக்க, ஹர்திக் பாண்ட்யா பதிலளித்துள்ளார். அதில், பழைய ஹர்திக் பாண்ட்யா மீண்டும் வந்துவிட்டேன். ரசிகர்களும் என்னை நம்ப தொடங்கியுள்ளனர். இனி இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. அதனை எதிர்நோக்கியுள்ளேன். குஜராத் அணிக்காக என்ன செய்தேனோ, அதை அப்படியே இந்திய அணிக்காகவும் செய்வேன்.


Click it and Unblock the Notifications