லண்டன் : மைதானத்தில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க கோலிக்கு உரிமை இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
கடந்தாண்டு தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்தியதால் ஓராண்டு விளையாட தடை செய்யப் பட்டனர். தடை முடிந்ததால், உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடிவருகின்றனர்.

தடையிலிருந்து திரும்பி வந்தாலும், பவுண்டரி லைனில் அவர்கள் இருவரும் பீல்டிங் செய்யும்போது, இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது உண்டு.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா போட்டியிஙன போது பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார் ஸ்மித். அப்போது, இந்திய ரசிகர்கள் அவரை சீட்டர் (ஏமாத்துக்காரா) என கிண்டலடித்தனர்.
அதை கண்ட கோலி இந்திய ரசிகர்களைப் பார்த்து, ஸ்மித்திற்கு கைதட்டி வரவேற்பு கொடுங்கள். தேவையில்லாமல் கேலி செய்ய வேண்டாமென கை அசைத்து அறிவுறுத்தினார். லியின் இந்த செயலுக்கு ஸ்மித் பாராட்டு தெரிவித்தார்.
இதனிடையே, இங்கிலாந்தின் முன்னாள் வீரரான நிக் காம்படன், விராட் கோலியின் இந்த செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். விடியோ ஒன்றை வெளியிட்டு அதில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். அவர் மேலும், கூறியதாவது: ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல கோலிக்கு உரிமை இல்லை. அவர் கிரிக்கெட் விளையாடினால் மட்டும் போதும் என்றார்.