உலக கோப்பையில் தவறான தீர்ப்பு..! அம்பயர்களை இவரு மாதிரி இனி யாராவது அசிங்கப்படுத்த முடியுமா?
வெலிங்டன்: அம்பயர்கள் தவறான முடிவுகளை படுமோசமாக செயல்படுவதில், கிரிக்கெட்டை தவிர வேறு விளையாட்டு ஏதும் இருக்கிறதா? என்று நியூசி. முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த உலக கோப்பையில் அம்பயர்களின் தவறான முடிவுகளால் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கிறது. பைனலில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது பலருக்கும் தெரியும்.

அம்பயர்களின் தவறான தீர்ப்புகளால் வீரர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, டிஆர்எஸ் விதி வீரர்களுக்கு மேலும் அநீதியை இழைக்கும் வகையில் இருந்தது.
எல்பிடபிள்யூ, கேட்ச் தொடங்கி அம்பயர்கள் பல தவறான முடிவுகளை அடிக்கடி எடுக்கின்றனர். அம்பயர்களின் மோசமான அம்பயரிங்காலேயே பல போட்டிகளின் முடிவுகள் மாறுகின்றன. நவீன கால கிரிக்கெட்டில் அம்பயரிங்கின் தரம் குறைவாக இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.
இந்நிலையில், அம்பயர்களின் மோசமான செயல்பாடுகளை நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
அம்பயர்கள் படுமோசமாக செயல்படுவதில், கிரிக்கெட்டை தவிர வேறு விளையாட்டு ஏதும் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டைரிசின் இந்த டுவீட்டை நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் லைக் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications