Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிறங்கள் 7, ஸ்வரங்கள் 7, கண்டங்கள் 7…! கிரிக்கெட் உலக அதிசயம் தோனியின் பிறந்த நாளும் ஜூலை 7

மும்பை: தல தோனியை உலகத்தின் 7 அதிசயங்களுடன் வித்தியாசமான முறையில் ஒப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார் சேவாக்.

இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்கியவர் தோனி. 3 வகையான ஐசிசி தொடர்களையும் கேப்டனாக இருந்து கோப்பையை இந்திய அணிக்காக வென்றெடுத்தவர். அவருடைய பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Former player sehwag wishes dhoni for his birthday

தோனியின் பிறந்தநாளான இன்று அவருக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்கும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

அவரது பிறந்த நாள் வாழ்த்து தான் ஏக வித்தியாசம். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: உலகில் மொத்தம் 7 கண்டங்கள், வாரத்திற்கு மொத்தம் 7 நாட்கள், வானவில்லுக்கு மொத்தம் 7 நிறங்கள், இசைக்கு மொத்தம் 7 ஸ்வரங்கள், மனிதர்களுக்கு 7 சக்கரம், கல்யாணத்திற்கு 7 பொருத்தம், உலகிற்கு 7 அதிசயம் மேலும் 7 ஆம் தேதி 7ஆம் மாதம் கிரிக்கெட் உலகின் அதிசயத்திற்கு பிறந்த நாள்.

இப்படித்தான் வித்தியாசமான முறையில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார் சேவாக். சேவாக்கின் இந்த வித்தியாசமான வாழ்த்தினை தோனியின் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 7, 2019, 14:36 [IST]
Other articles published on Jul 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+