
9 அணிகள்
அதேபோன்று, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் ஆடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டியாகும். அனைத்து அணிகளுமே 3 உள்நாட்டு மற்றும் 3 வெளிநாட்டு தொடர்களில் விளையாடும்.

2021ல் பைனல்
போட்டிகளின்முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் பைனல் நடக்கும். இந் நிலையில், டெஸ்ட் போட்டிகளில் மாற்றத்தை கொண்டு வந்தது.

ஜெர்சியில் மாற்றம்
அதாவது, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை போலவே டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை ஜெர்சியிலும் வீரர்களின் பெயரும் நம்பரும் போட்டுக்கொள்ளலாம் என்பதாகும். ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெயர் மற்றும் நம்பர் பொறித்த ஜெர்சிதான் அணிந்து ஆடிவருகின்றனர்.

எதிர்க்கும் அக்தர்
அதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் பிரெட் லீ ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பார்க்கவே சகிக்கவில்லை என்கிற ரீதியில் இருவரும் கடுமையாக எதிர்த்திருந்தனர். இப்போது அந்த வரிசையில் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் சேர்ந்திருக்கிறார்.
பாரம்பரியம் போகிறது
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெர்சியில் வீரர்களின் பெயரும் நம்பரும் போட்டிருப்பது ரொம்ப மோசம். டெஸ்ட் கிரிக்கெட் பாரம்பரியத்தை கெடுக்கும் வகையில் இருக்கிறது. இது போன்று செய்யக்கூடாது. அந்த முடிவை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











