Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் தான் இந்தியாவின் நம்பிக்கை.. அனைத்து போட்டியிலும் ஆட வேண்டும்.. இளம் வீரருக்காக லக்‌ஷ்மண் குரல்

மும்பை: இலங்கைக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் அந்த ஒரு வீரர் மட்டும் விளையாடியே ஆக வேண்டும் என வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இளம் படையை கொண்ட இந்திய ஏ அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்த தொடர் நெருங்கி வருவதால் ப்ளேயிங் 11 குறித்த கேள்விகள் தற்போதே எழத்தொடங்கியுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம்

இலங்கை சுற்றுப்பயணம்

இலங்கை தொடருக்காக சென்றுள்ள 20 பேர் கொண்ட இந்திய அணியில் 6 வீரர்கள் மட்டுமே புதுமுக வீரர்கள் ஆவர். மற்றவர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பெரிய அனுபவம் பெற்ற பின்னர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானவர்கள் தான் ஆகும். குறிப்பாக சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

நம்பிக்கை வீரர்

நம்பிக்கை வீரர்

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் என 6 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. சூர்யகுமார் இந்த தொடரில் 6 போட்டிகளிலும் விளையாட வேண்டும். ஏனென்றால் அவர் நிச்சயம் டி20 உலகக்கோப்பையில் விளையாட தகுதியானவர்.

லக்‌ஷ்மண் அறிவுரை

லக்‌ஷ்மண் அறிவுரை

எனவே சூர்யகுமார் யாதவ் தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பிலேயே சர்வதேச போட்டிகளிலும் ரன் அடிக்கும் நம்பிக்கையை பெற வேண்டும். இங்கிலாந்து தொடரில் சூர்யகுமார் 3வது வீரராக களமிறங்கி ஆடிய ஆட்டம் பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது. அறிமுக போட்டியிலேயே உலகத்தரம் வாய்ந்த பவுலரான ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். அது அவரின் நம்பிக்கையை உணர்த்துகிறது.

அசத்தல்

அசத்தல்

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவுக்கு சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. இதில் தனது முதல் இன்னிங்ஸிலேயே அரை சதம் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

Story first published: Sunday, July 4, 2021, 17:42 [IST]
Other articles published on Jul 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+