Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி..! என்ன.. உங்க மனசில பெரிய ஆபிசருன்னு நெனைப்போ? கழுவி, கழுவி ஊத்தும் முன்னாள் வீரர்கள்

Recommended Video

IPL 2019: Chennai vs Rajasthan | தோனியின் செயலை விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்- வீடியோ

ஜெய்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி நடந்துகொண்ட விதம் முற்றிலும் தவறு என்று முன்னாள் வீரர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. போட்டியில் கடைசி பந்தில் சிஎஸ்கே அணி திரில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த ஓவரும், அம்பயரின் நோ பால் சர்ச்சையும் பெரும் விவாதத்தை உருவாக்கி விட்டிருக்கின்றன.

அவர் செய்தது தப்பில்லை... அப்படி யாரும் செய்யாத ஒன்றை அவர் செய்து விட்டார் என்று இணையத்தில் ஆதரவு குரல் ஒலித்து வருகின்றன. ரசிகர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் ஆளுக்கு ஒரு கருத்தை கூறி வருகின்றனர்.

டுவிட்டர் பஞ்சாயத்து

டுவிட்டர் பஞ்சாயத்து

இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்... அவர் செய்தது தப்பு.. இதென்ன சாதாரண உள்ளூர் மேட்சா.. உள்ள பூந்து பஞ்சாயத்து பண்ண என்றும் வம்பு குரல்கள் அதிகரித்துள்ளன. அதிலும் இப்போது இருக்கிற டுவிட்டரில் சொல்லவே வேண்டாம்.

கேள்வி

கேள்வி

கிடைத்த கேப்பில் முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் என ஆளுக்கு ஒரு புறம் தோனியை அரையோ... அரை என அரைத்துக் கொண்டிருக்கின்றனர். கோபம் வந்தால் தோனி என்னவெல்லாம் செய்வாரா? ஆட்டத்தின் ஸ்பிரிட்டை இப்படி தான் குலைப்பதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏற்க முடியாத செயல்

இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் டுவிட்டரில் தோனியை கடிந்து கொண்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தோனியின் இந்த செயல் ஆட்டத்துக்கு நல்லதல்ல. களத்துக்கு வெளியில் இருக்கும் கேப்டன் உள்ளே எப்படி செல்லலாம். அவரது இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கூறியுள்ளார்.

உரிமை உண்டு

முன்னாள் வீரர் ஹேமங் பதானியும் விடவில்லை. அவரும் தம் பங்குக்கு தோனியை வாரிவிட்டிருக்கிறார். அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: அம்பயர் நோ பால் கொடுத்தால்கூட, அந்த முடிவிலிருந்து பின்வாங்க அம்பயருக்கு உரிமை இருக்கிறது. அப்படி இருக்கும் போது.. தோனி இந்த விவகாரத்தை கையாண்ட விதம் மிகுந்த ஆச்சரியம் தருவதாக உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

தவறான முன்னுதாரணம்

தோனிக்கு மைதானத்துக்குள் செல்ல உரிமையே இல்லை. அவர் எப்படி செல்லலாம் என்று விமர்சித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறியிருப்பதாவது: நடப்பு ஐபிஎல் சீசனில் அம்பயர்களின் செயல்பாடுகள் சரியில்லை. நோ பால் கொடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. என்ன இருந்தாலும் எதிரணி கேப்டன் தோனி களத்திற்குள் செல்ல உரிமையில்லை. அவர் தவறான முன் உதாரணத்தை கிரிக்கெட் உலகுக்கு அமைத்து கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் அல்ல

கிரிக்கெட் அல்ல

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பவுலர் டைட் தோனியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நினைத்த போதெல்லாம் களத்துக்குள் வந்து செல்ல... இது ஒன்றும் ஊரில் ஆடும் கிரிக்கெட் அல்ல.

உணர வேண்டும்

உணர வேண்டும்

தோனி அவ்வப்போது தான் ஒரு வீரர் என்பதை மறந்துவிட்டு ஆபிசர் போல நடந்துகொள்கிறார். வீரர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை தோனி உணர வேண்டும் என்று டைட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Story first published: Friday, April 12, 2019, 15:52 [IST]
Other articles published on Apr 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+