Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரணடைந்து விட்டார்கள்.. போராட்ட குணம் எங்கே.. இந்திய அணி குறித்து முன்னாள் வீரர்கள் புழுக்கம்!

Recommended Video

சரணடைந்து விட்டார்கள்.. போராட்ட குணம் எங்கே.. முன்னாள் வீரர்கள் புழுக்கம்!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர். கொஞ்சம் கூட போராடாமல் இந்தியா தோல்வி அடைந்ததாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் இங்கிலாந்து வென்றது.

289 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

முரளி விஜய், கே.எல். ராகுல், அஜங்யா ரஹானே, சத்தேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி என வலுவான பேட்டிங் வரிசை இருந்தும், இங்கிலாந்தில் தொடர்ந்து 5வது டெஸ்டில் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் ஆட்டம் குறித்து பல முன்னாள் வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சச்சின் அட்வைஸ்

அனைத்து வகையிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை இங்கிலாந்து வெளிப்படுத்தியுள்ளது. ஆன்டர்சன், பிராட் சிறப்பாக பவுலிங் செய்தனர். கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்தார். அடுத்தப் போட்டிகளில் வெற்றி பெற இந்தியா தயாராக வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

வறுத்தெடுத்த சேவாக்

இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது. இதுபோன்ற நேரங்களில் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் போராடாமல் இந்தியா முழுமையாக சரணடைந்தது வேதனையளிக்கிறது என்று அதிரடி பேஸ்ட்மேன் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

வறுத்தெடுத்த சேவாக்

இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது. இதுபோன்ற நேரங்களில் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் போராடாமல் இந்தியா முழுமையாக சரணடைந்தது வேதனையளிக்கிறது என்று அதிரடி பேஸ்ட்மேன் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

பேட்டிங்கில் தோல்வி

மிகவும் மோசமான ஆட்டம். பிரச்னை என்ன, அதற்கு தீர்வு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். இந்திய பேட்டிங் வரிசை முழுமையாக தோல்வியடைந்தது வேதனை அளிக்கிறது என்று முன்னாள் வீரர் பிஷண்சிங் பேடி கூறியுள்ளார்.

பாடம் படிப்பார்களா

மோசமான நிலையில் உள்ளோம். ஆனால் கொஞ்சம்கூட போராடாமல் தோல்வியடைந்ததுதான் வேதனையாக உள்ளது. இந்த பாடத்தை கற்றுக் கொண்டு, அடுத்த ஆட்டங்களிலாவது சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று வி.வி.எஸ். லக்ஷ்மண் கூறியுள்ளார்.

Story first published: Monday, August 13, 2018, 17:19 [IST]
Other articles published on Aug 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+