
கோலியின் விளக்க்ம்
இந்திய அணியின் தோல்விக்கு 2 ஸ்பின்னர்கள் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற திட்டம் தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசியிருந்த கோலி, இந்திய அணிக்கு தற்போது வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர் வேண்டும். அப்போது தான் எதிரணிக்கு புதுவகையான நெருக்கடிகள் கொடுக்க முடியும். ஹர்த்திக் பாண்ட்யாவிற்கு காயம் ஏற்பட்டதில் இருந்து இந்தியாவால் எதனையும் முயற்சிக்க முடியவில்லை எனத்தெரிவித்தார்.

அவரை நம்ப வேண்டாம்
கோலியின் இந்த கருத்துக்கு முன்னாள் அணி தேர்வுக்குழு உறுப்பினர் சரந்தீப் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு மேலும், ஹர்த்திக் பாண்ட்யாவை நம்பியிருக்க கூடாது. அவர் எப்போது குணமடைந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் பந்துவீசுவார் என்பது யாருக்கும் தெரியாது. எனவே ஷர்துல் தாக்கூர், விஜய் சங்கர், சிவம் துபே போன்றோருக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்துவிட வேண்டும்.

இந்திய அணியின் தவறு
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே ப்ளேயிங் 11 வெளியிடப்பட்டது. ஆனால் வானிலையை பார்த்த பிறகும் அதனை மாற்றாமல் போனது பிரச்னையாகி விட்டது.

ஷர்துல் தாக்கூர்
அதுபோன்ற களத்தில் ஷர்துல் தாக்கூர் போன்ற வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர்கள் தேவை. அப்போதுதான் இறுதியில் பேட்ஸ்மேன் இருப்பார், பந்துவீச்சும் சிறப்பாக இருக்கும். ஆனால் அவரை 15 பேர் கொண்ட அணியில் கூட சேர்த்துக்கொள்ளவில்லை எனத்தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications