Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் நீங்க பார்ம்க்கு வர ஒரே வழி இதான்..தயவு செய்து பண்ணுங்க..தென்னாப்பிரிக்க ஜாம்பவான் கருத்து

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா தற்போது ரசிகர்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார். கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ரோகித் சர்மாவின் பேட்டிங் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட ரோகித் சர்மா பேட்டிங்கில் முக்கிய ஆட்டங்களில் சொதப்பினார். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கூட ரோகித் சர்மா பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை.

Former South africa captain Graeme smith advices for Rohit sharma

குறிப்பாக நன்றாக பேட்டிங்கில் விளையாடினாலும் தேவையில்லாமல் ஒரு ஷாட் ஆடி தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் ரோஹித் அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் ரோகித் சர்மாவுக்கு ஒரு அறிவுரையை வழங்கி இருக்கிறார். அதில் கேப்டனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே, அவர்களின் தனிப்பட்ட செயல்பாடு தான்.

ஒரு அணியின் கேப்டனுக்கு எப்போதுமே நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். இதனால் ரோகித் சர்மா கிரிக்கெட்டை விட்டு சிறிது காலம் தள்ளி இருந்து புத்துணர்ச்சி பெற வேண்டும். ஏனென்றால் ரோகித்தின் பேட்டிங் ஃபார்ம் அவருக்கு உரிய தரத்தில் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரிலும் அவருடைய பேட்டிங் பெரிய அளவில் எடுபடவில்லை. உலக டெஸ்ட் பைனலில் கூட அவர் சரியாக பேட்டிங்கில் ரன்கள் சேர்க்கவில்லை.

இது போன்ற தனிப்பட்ட செயல்பாடுகள் அவருடைய ஒட்டுமொத்த கேப்டன்சியும் கிரிக்கெட்டையும் பாதிக்கும். ரோகித் சர்மாவின் கேப்டன்சி செய்யும் விதத்தை யாரும் விமர்சிக்கவில்லை. அவருடைய தனிப்பட்ட செயல்பாடுகள் தான் தற்போது கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

ரோகித் சர்மா தொடர்ந்து பெரிய ஸ்கோரை அடித்தால் அவர் மீதான நெருக்கடி சுத்தமாகப் போய்விடும் என்று கிராம் ஸ்மித் கோரிக்கை விடுத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா 15 மற்றும் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தற்போது அவர் வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, June 17, 2023, 23:35 [IST]
Other articles published on Jun 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+