Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கடின சூழல்களை அவர் புரிந்துக்கொள்ள மாட்டார்”.. தோனி vs யுவ்ராஜ் சிங்.. இலங்கை வீரர் சுவாரஸ்ய கருத்து

மும்பை: இந்திய அணிக்கு அழுத்தங்களும், சிக்கல்களும் உருவான போதெல்லாம் யுவ்ராஜ் சிங், சூழலை புரிந்துக்கொண்டு நடந்ததில்லை எனவும், தோனி அவரை விட சிறந்தவர் எனவும் இலங்கை முன்னாள் வீரர் ரஸுல் அர்னால்ட் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் யாராலும் அழிக்க முடியாத சாதனைகளை படைத்தவர்கள் எம்.எஸ்.தோனி மற்றும் யுவ்ராஜ் சிங். இன்று வரை இவரின் பெயர்களை தான் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக கூறி வருகின்றனர்.

தோனியின் கேப்டன்சியில் பல்வேறு வெற்றிகளை இந்தியாவுக்காக யுவ்ராஜ் சிங் போராடி பெற்று கொடுத்துள்ளார். உலகக்கோப்பையில் அவரின் பங்களிப்பு திருப்புமுனையாக இருந்தது.

தோனியின் செயல்பாடு

தோனியின் செயல்பாடு

இப்படி இருக்கையில் தோனியின் குணம் யுவ்ராஜ் சிங்கிடம் இல்லை என இலங்கை முன்னாள் கேப்டன் ரஸுல் அர்னால்ட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அணியின் சூழலுக்கு ஏற்றார் போல தோனியால் நிதானமாக நின்று வெற்றியை தேடி கொடுக்கவும் தெரியும், அதிரடியாக ஆடி ஃபினிஷர் பணியையும் செய்ய தெரியும். என்னுடைய பலமும் அதுதான் ஆனால் கடைசி நேரத்தில் ஒரு ஓவருக்கு 8 - 10 ரன்கள் என்றால் நான் அடிப்பேன். ஆனால் தோனி 15 - 20 ரன்கள் என்றாலும் அசால்ட்டாக அடித்துவிடுவார்.

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

இந்திய அணி சிக்கலில் இருக்கும் போது எதிரே எந்தவொரு பேட்ஸ்மேன் இருந்தாலும் அவருடன் நிதானமான பார்டர்னர்ஷிப்பை அமைத்துவிட்டு, கடைசி நேரத்தில் சிக்ஸர்களை விளாசுவார். அதுவும் தொடர்ச்சியாக இந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். இதற்கு சான்று பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி தான். இந்தியா 29/5 என சரிந்தது. அப்போது களமிறங்கிய தோனி 227/6 என மாற்றி அசத்தினார்.

யுவ்ராஜின் செயல்பாடு

யுவ்ராஜின் செயல்பாடு

ஆனால் யுவ்ராஜ் சிங் அப்படி கிடையாது. அணியில் ஏற்படும் அழுத்தங்களை யுவ்ராஜ் சிங்கால் புரிந்துக்கொண்டு களத்தில் செயல்பட முடியாது. அவர் எப்போதுமே எதிரே உள்ள வீரருடன் நிதானம் என்ற செயல்பாட்டிற்கு வரமாட்டார். அதிரடி என்ற ப்ளானை மட்டுமே வைத்து அதில் வெற்றி கண்டுள்ளார். சில சமயங்களில் சொதப்பினாலும், அந்த அணுகுமுறையில் இருந்து மாறியதில்லை. அதுதான் அவரின் பலம் என அர்னால்ட் கூறியுள்ளார்.

ஓய்வு விவரம்

ஓய்வு விவரம்

யுவ்ராஜ் சிங் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் போது இந்திய அணிக்கு அறிமுகமான சூழலில் 2019ம் ஆண்டு ஜூலையில் ஓய்வை அறிவித்தார். மறுபுறம் எம்.எஸ்.தோனி 2004ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி 2019ம் ஆண்டு உலகக்கோப்பை முடிந்தவுடனேயே ஓய்வை அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 22, 2023, 21:12 [IST]
Other articles published on Feb 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+