எங்கேயும் போக முடியவில்லை... டிராபிக்கில் திணறிய முன்னாள் இலங்கை வீரர்
பூனா : இந்தியா -இலங்கை அணிகள் மோதும் 3வது சர்வதேச ஒருநாள் போட்டிகளின் வர்ணனையை மேற்கொள்ள பூனா வந்த முன்னாள் இலங்கை வீரர் ரசல் அர்னால்ட் வரும்வழியில் பயங்கர டிராபிக்கில் சிக்கி திணறினார்
ஏர்போர்ட்டிலிருந்து தான் தங்கவேண்டிய ஹோட்டலுக்கு வரும்வழியில் அவர் டிராபிக்கில் சிக்கிய கதையை தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்த டிவிட்டர்வாசிகள் பூனாவில் டிராபிக் ஜாம் என்பது சாதாரணமான விஷயம் என்று தெரிவித்தனர்.

பூனாவில் நாளை 3வது போட்டி
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்த ஆண்டின் முதல் சர்வதேச டி20 தொடரின் மூன்றாவது போட்டி நாளை பூனாவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

டிராபிக்கில் சிக்கி தவிப்பு
இந்த போட்டியில் வர்ணனை செய்வதற்காக இலங்கை அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ரசல் அர்னால்ட் பூனாவிற்கு வந்தபோது வரும்வழியில் தீவிர டிராபிக்கில் சிக்கினார்.
டிவிட்டர் தளத்தில் பகிர்வு
வரும் வழியில் போக்குவரத்தில் சிக்கிய அர்னால்ட், அதை வீடியோவாக பதிவு செய்து, எந்தப் பக்கமும் போக முடியாதபடி தான் சிக்கிய கதையை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து பூனாவில் டிராபிக் ஜாம் என்பது சகஜமான ஒன்றுதான் என்று டிவிட்டர்வாசிகள் பதிலளித்தனர்.

2வது போட்டியில் இந்தியா வெற்றி
கவுஹாத்தியில் நடைபெற்ற இந்தியா -இலங்கை இடையிலான ஆண்டின் முதல் சர்வதேச டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது. இந்நிலையில் பூனாவில் நாளை 3வது போட்டி நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications